ஆட்சி அமைப்பதற்காக செயல்படாமல் நாட்டை உருவாக்க செயல்படும் ஒரே கட்சி பா.ஜ.க..... ராஜ்நாத் சிங் பெருமிதம்

 
பா.ஜ.க.

ஆட்சி அமைப்பதற்காக செயல்படாமல்   நாட்டை உருவாக்க வேண்டும் என்று செயல்படும் ஒரே கட்சி பா.ஜ.க.தான்  என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நேற்று பா.ஜ.க.வின் புதிய அலுவலகத்தை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில் கூறியதாவது: ஆட்சி அமைப்பதற்காக செயல்படாமல்   நாட்டை உருவாக்க வேண்டும் என்று செயல்படும் ஒரே கட்சி பா.ஜ.க.. பா.ஜ.க.வுக்கு சொந்த சிந்தனை செயல்முறை  மற்றும் அதன் சொந்த சித்தாங்கள் உள்ளன.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ராஜ்நாத் சிங்

புதிய அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட ஹரியானா முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மனோகர் லால் கட்டார் பேசுகையில், ஒரு கட்சி தொண்டர் இரவும், பகலும் உழைக்கிறார். இது கட்சி அலுவலகம் அல்ல கோயில். பா.ஜ.க. என்பது ஒருவரின் பெயரால் செயல்படாத கட்சி, ஆனால் நமது கொள்கைகளின் அடிப்படையில் செயல்படும் கட்சி. லட்சக்கணக்கான நமது தொண்டர்கள் ஒன்றிணைந்து இந்த கட்சியை உருவாக்குகிறார்கள். அதே அளவு கட்சி அலுவலகமும் பங்காற்றும் என தெரிவித்தார்.

அதிகாரி பேசிய வார்த்தைகள் தவறுதான்.. ஆனால் சட்டம் ஒழுங்கை பராமரிக்க கண்டிப்பு அவசியம்.. முதல்வர் மனோகர் லால் கட்டார்

ஹரியானாவில் உள்ள கார்கோடாவில் மாருதி சுசுகி ஆலையின் கட்டுமான பணியை இம்மாதம் 28ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலா கூறுகையில், இது நாட்டின் வளர்ச்சியுடன் ஏற்றுமதி சந்தைக்கும் ஊக்கத்தை  அளிக்கும். கானாவூர் பாடியில் ரயில் பெட்டி தொழிற்சாலை கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன. கானூரில் உள்ள சர்வதேச தோட்டக்கலை சந்தைக்கு உத்வேகம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.