ரஜினிகாந்த் சார், அண்ணாமலை உங்களை தவறாக பயன்படுத்துகிறார் - காயத்ரி ரகுராம்
தமிழக பாஜகவில் முன்னாள் மாநிலத் தலைவரும் தற்போதைய மத்திய இணை அமைச்சருமான எல்.முருகனின் ஆதரவாளர் என்று காயத்ரி ரகுராமை சொல்கிறார்கள். இதனால்தானோ என்னவோ தெரியவில்லை.. தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை வந்தது முதல் அவருக்கும் இவருக்குமான மோதல் தொடர்ந்து வந்தது.
இந்த மோதலின் உச்சகட்டமாக தமிழக பாஜகவில் இருந்து விலகிவிட்டார் காயத்ரி ரகுராம். அதன் பின்னரும் அண்ணாமலை மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே வருகிறார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் மக்கள் மன்றத்தின் தகவல் தொழில்நுட்ப அணியை ட்ரோல் செய்வதற்காக அண்ணாமலை தவறாக பயன்படுத்துகிறார் என்று ரஜினிக்கு தெரியப்படுத்துகிறா காயத்ரி ரகுராம்.
அவர், ‘’ரஜினிகாந்த் சார்.. மக்கள் சேவை கட்சி அல்லது ரஜினி சார் ரசிகர் மன்றத்தின் தகவல் தொழில்நுட்ப அணியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்ரோலுக்காக தவறாக பயன்படுத்துகிறார். தயவுசெய்து இதை கவனியுங்கள் சார். அவர்கள் மற்ற நடிகர்களின் ரசிகர் மன்றத்தின் தகவல் தொழில்நுட்ப அணியினரையும் அணுகுகிறார்கள். நானும் உங்களின் மிகப்பெரிய ரசிகன். உங்கள் ரசிகர் மன்றத்தின் பல ட்வீட்களை கவனித்திருக்கிறேன் சார்’’என்று கூறியிருக்கிறார்.
அதற்கு வைஷாலி என்பவர், ‘’ரஜினிகாந்த் என்பவர் ஒரு நடிகர். அவர் ரசிகர்கள் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாக செயல்படலாம். கமல் கட்சிக்கு ஓட்டு போட்ட ரஜினி ரசிகர்கள் கூட இருக்கிறார்கள். ரசிகர்களின் அரசியல் நடவடிக்கைக்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம்?விசம் காயத்திரினு கரெக்ட்டா தான் பெயர் வைச்சிருக்காங்க உனக்கு ’’என்கிறார்.
— vaishali (@vaisu_tweets) January 5, 2023