2024-ல் மோடிக்கு ஆதரவாக ரஜினி பிரச்சாரம் செய்ய வேண்டும் - அர்ஜுன் சம்பத்

 
2024-ல் மோடிக்கு ஆதரவாக ரஜினி பிரச்சாரம் செய்ய வேண்டும்  - அர்ஜுன் சம்பத்

 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில்  பிரதமர் மோடிக்கு ஆதரவாக குரல் கொடுத்து   ரஜினி  பிரச்சாரம் செய்ய வேண்டும் என  அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று, புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி  நினைவிடத்தில் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.  அதன்பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அவர், “மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி, புதுச்சேரி மக்கள் மட்டுமில்லாது, பல மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் அன்பை பெற்றது. யானை மறைந்தபோது நடந்த ஊர்வலமே இதற்கு சாட்சி. யானையை கோயிலில் இருந்து அகற்றவேண்டுமென்று பலர் முயற்சி செய்தனர். கோயில் என்றால் யானை இருக்க வேண்டும். அதனால், மணக்குள விநாயகர் கோயிலுக்கு புதிதாக யானையை அரசு வழங்க வேண்டும். யானை லட்சுமி நினைவாக நினைவகம் அமைக்க வேண்டும்.

2024-ல் மோடிக்கு ஆதரவாக ரஜினி பிரச்சாரம் செய்ய வேண்டும்  - அர்ஜுன் சம்பத்

நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலை முன்னெடுத்தவர். அக்கருத்துகள் மேன்மை பெற பாஜக வலிமை பெற வேண்டும். நேரடி அரசியலில் அவர் ஈடுபடாவிட்டாலும் திராவிட மாயையை அகற்றவும், மோடிக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்ய வேண்டும். புதுச்சேரி மக்கள் தேசியத்தின் பக்கமுள்ளவர்கள். அதனால் திராவிட அரசியலை ஏற்க மாட்டார்கள். மு.க.ஸ்டாலின் விருப்பமான புதுச்சேரியில் திமுக ஆட்சி என்ற ஆசை நிறைவேறாது” என்று கூறினார்.