அண்ணாமலையை ஏமாற்றிய ரஜினி..இரட்டைத்தலைமையால் பாஜகவில் அல்லாடுகிறார்...

 
r

ரஜினியை நம்பித்தான் அரசியலுக்கு வந்தார் அண்ணாமலை.  ஆனால் அந்த ரஜினியே அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னதால் அப்செட்டில்  இருந்தவர் வேறு வழியில்லாமல் பாஜகவில் நீடித்துக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை.   ஆனால் பாஜகவில் அவர் தன்னிச்சையாக செயல்பட முடியாத நிலை உள்ளது.   பாஜகவில் இரட்டைத்தலைமை இருக்கிறது.  அண்ணாமலையால் எந்த முடிவும் சுயமாக எடுக்க முடியாது என்கிறார் பாஜகவில் இருந்து விலகிய டாக்டர் சரவணன்.

 மறைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த மதுரை விமான நிலையத்தில் மாவட்டச் செயலாளர் டாக்டர் சரவணன் உட்பட பாஜக திரண்டு இருந்த பாஜகவினரை பார்த்து,   இவனுங்களுக்கு எல்லாம் என்ன தகுதி இருக்கிறது?  இவனுங்களை எல்லாம் யார் இங்கே உள்ளே விட்டது? என்று நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன் சத்தம் போட , அமைச்சரின் காரை வழிமறித்து செருப்பை வீசி எதிர்ப்பை தெரிவித்தனர் பாஜகவினர்.

rs

 இதை அடுத்து சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.   எங்களைப் பார்த்து என்ன தகுதி இருக்கிறது என்று கேட்க பி.டி.ஆருக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று ஆவேசமான டாக்டர் சரவணன் ,  இனி பி டி ஆர் செல்லும் இடங்களில் எல்லாம் பாஜக எதிர்ப்பை பதிவு செய்யும் என்று எச்சரித்தார்.  ஆனால் அதன் பின்னர் பிடிஆரை  பகைத்துக் கொண்டதால் மதுரையில் தான் நடத்தி வரும் சரவணா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு இடையூறு ஏற்படும் என்பதை உணர்ந்து அந்த இரவே பிடிஆர்- ஐ நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டு பாஜகவில் இருந்து விலகுவதாகவும் தடாலடியாக அறிவித்தார். 

 மறுநாள் காலையில் அண்ணாமலையும் டாக்டர் சரவணனை பாஜகவில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டார்.   இந்த நிலையில் டாக்டர் சரவணன் அளித்துள்ள பேட்டி ஒன்றில்,    ஆயிரம் தான் இருந்தாலும் நமக்கெல்லாம் பாஜக ஒத்துவராத ஒரு கட்சி தான் .  என்னை போன்ற மனநிலையில்தான் பலரும் அக்கட்சியில் உள்ளனர்.   நான் பாஜகவில் இருந்து வெளியேறியவுடன் பலரும் என்னை தொடர்பு கொண்டு எங்களையும் கட்சியிலிருந்து விடுவித்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள்.

sa

பாஜகவில் முழுக்க முழுக்க வெறுப்பு அரசியல் தான் நீடித்து வருகிறது.   மாநிலத் தலைவர் அண்ணாமலை கூட கட்சியில் திருப்தியாக இல்லை.  ரஜினியை நம்பித்தான் அவர் அரசியலுக்கு வந்தார் . ஆனால் ரஜினியை அரசியலுக்கு வரப்போவதில்லை என்று சொன்னதும் அவர் அப்செட்டில் இருந்தார்.   வேறு வழியில்லாமல் பாஜகவில் தொடர்கிறார்.   பாஜகவில் அவராலும் தன்னிச்சையாக செயல்பட முடியாத நிலை இருக்கிறது.   பாஜகவில் இருக்கும் இரட்டை தலைமை தான் அதற்கு காரணம் . எந்த முடிவையும் அண்ணாமலையால் சுயமாக எடுக்க முடியாது.   பாஜ கட்சியின் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் மறைமுக தலைமையாக செயல்பட்டு வருகிறார் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.