உத்தர பிரதேசத்தில் மாயாவதி கட்சியுடன் பா.ஜ.க.வுக்கு மறைமுக புரிதல்.. ராஜ்பர் குற்றச்சாட்டு

 
எதிர்காலத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க மாட்டோம்.. ஓ.பி. ராஜ்பர்

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 100க்கும் அதிகமாக தொகுதிகளில் மாயாவதி கட்சியுடன் பா.ஜ.க.வுக்கு மறைமுக புரிதல் இருந்தது என்று ஓம் பிரகாஷ் ராஜ்பர் குற்றம் சாட்டினார்.

சமீபத்தில் நடந்து முடிந்த உத்தர பிரதேசத்தில் ஓம் பிரகாஷ் ராஜ்பர் தலைமையிலான சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி மொத்தம் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பா.ஜ.க. 250க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை அமைக்கிறது.

பா.ஜ.க.

இந்நிலையில், 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் மறைமுக புரிதலை பா.ஜ.க. கொண்டதால்தான் அந்த கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியதாக ஓம் பிரகாஷ் ராஜ்பர்  குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக ஓம் பிரகாஷ் ராஜ்பர்  கூறியதாவது: பகுஜன் சமாஜ் கட்சியும், பா.ஜ.க.வும் கலந்ததால் பெரிய ஆட்டமாக( பா.ஜ.க. பெரும்பான்மையுடன் வெற்றி) உருவெடுத்தது. பூர்வாஞ்சலில் உ்ளள 122 இடங்கள், பா.ஜ.க. அலுவலகத்தில் வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட்டு, பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் சின்னங்கள் வழங்கப்பட்டன. அதற்கான ஆதாரங்களை என்னால் வழங்க முடியும். 

வெங்கையா நாயுடு சொன்னதை மோடி அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும்.. பகுஜன் சமாஜ் கட்சி வலியுறுத்தல்..

4 முறை ஆட்சியில் இருந்த கட்சிகள் அது பகுஜன் சமாஜ் அல்லது காங்கிரஸா இருக்கலாம்- பா.ஜ.க.வை ஆதரித்தது. அவர்களின் வாக்குகள் எங்கே போனது? விதானசபா போர் விமர்சனம் நடத்த முடிவு செய்துள்ளோம். எங்கள் குறைபாடுகளை சுட்டிக்காட்டும் அந்த அறிக்கையில் அடிப்படையில், நாங்கள் அதை சரி செய்ய  முயற்சிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.