கட்சி தலைவராக ராகுல் காந்தி வர வேண்டும் என்று ஒரு மனதாக தீர்மானம்.. ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டி

 
ரூ. 500க்கு கேஸ் சிலிண்டர், இலவச மின்சாரம் - குஜராத் தேர்தலையொட்டி ராகுல் வாக்குறுதி..

ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டி, கட்சி தலைவராக ராகுல் காந்தி வர வேண்டும் என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை தேர்ந்தெடுப்பதில் அந்த கட்சியினர் இடையே மாறுப்பட்ட கருத்துக்ள் நிலவுகின்றன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒரு பிரிவினர், காந்தி குடும்பத்தை சேராத மற்றும் இளம் தலைவர் ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என விரும்புகின்றனர். அதேசமயம் ஒரு பகுதியினர் ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக்க வேண்டும் உறுதியாக நிற்கின்றனர்.

காங்கிரஸ்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்  தொடங்குக ஒரு சில தினங்களை உள்ளநிலையில், ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டி, கட்சி தலைவராக ராகுல் காந்தி வர வேண்டும் என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ராஜஸ்தான் அமைச்சர் பி.எஸ். கச்சாரியாவால் இது தொடர்பாக கூறியதாவது: மாநில தலைவர்கள் நியமனம் உள்பட தேசிய தலைவர் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு அனைவரும் கட்டுப்படுவார்கள் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராகுல் காந்தியை கட்சி தலைவராக நியமிக்க அசோக் கெலாட் கொண்டு வந்த மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அசோக் கெலாட்
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாதம் 22ம் தேதி வெளியாகும். தலைவர் தேர்தலில் விருப்பம் உள்ளவர்கள் வரும் 24ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். அக்டோபர் 1ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும். அக்டோபர் 8ம் தேதி வேட்புமனு திரும்ப பெறுவதற்கான கடைசி நாள். அக்டோபர் 17ம் தேதி தேர்தல் நடைபெறும். அக்டோபர் 19ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும்.