அதிகாரம் வரும் போகும். அதிகாரத்தின் செப்பு தகட்டை யாரும் கொண்டு வரவில்லை.. உத்தவை எச்சரித்த ராஜ் தாக்கரே

 
இது என்னடா மகாராஷ்டிரா அரசியலுக்கு வந்த சோதனை! ஒரு சீட் ஜெயிச்ச ராஜ் தாக்கரேவும் சரத் பவாருடன் சந்திப்பு!

அதிகாரம் வரும் போகும், அதிகாரத்தின் செப்பு தகட்டை யாரும் கொண்டு வரவில்லை என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை ராஜ் தாக்கரே எச்சரித்தார்.

மகாராஷ்டிராவில் மே 3ம் தேதிக்குள் மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அம்மாநில அரசுக்கு மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே எச்சரிக்கை விடுத்து இருந்தார். கடந்த 4ம் தேதியன்று ஒலி பெருக்கிகள் பயன்படுத்திய மசூதிகளுக்கு முன்பாக மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா தொண்டர்கள் ஒலி பெருக்கிகள் வைத்து ஹனுமன் கீர்த்தனைகளை இசைக்க முயற்சி செய்தனர். இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

உத்தவ் தாக்கரே

இந்நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே கடிதம் ஒன்று கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ராஜ் தாக்கரே கூறியிருப்பதாவது: மாநில அரசுக்கு நான் ஒன்று மட்டும் கூற விரும்புகிறேன். எங்கள் பொறுமையின் எல்லையை காணாதீர்கள். அதிகாரம் வரும் போகும். அதிகாரத்தின் செப்பு தகட்டை யாரும் கொண்டு வரவில்லை. உத்தவ் தாக்கரே, நீங்கள் கூட இல்லை. மசூதிகளில் இருந்து ஒலி பெருக்கிகளை அகற்றுவதில் மகாராஷ்டிரா அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

மசூதிகளில் ஒலி பெருக்கிகள்

இது மசூதிகள் மட்டுமல்ல, பல கோயில்களில் சட்டவிரோத ஒலிபெருக்கிகள் இயங்குகின்றன. இது (சட்ட விரோத ஒலிபெருக்கிகள்) மதப் பிரச்சினை அல்ல, சமூக பிரச்சினை என்பதை நான் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளேன். இது மதம் சார்ந்த பிரச்சினையல்ல சமூக பிரச்சினை. யாராவது அதற்கு மதவாத தொனியை கொடுக்க முயற்சித்தால், நாமும் அவ்வாறே செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நாங்கள் தொந்தரவு அல்லது கலவரத்தை விரும்பவில்லை. ஆனால் ஒலி பெருக்கிகள் செல்ல (அகற்றப்பட) வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.