நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்றாங்க, ஆனால் ஜாகிர் நாயக்கிடம் யாரும் கேட்கவில்லை.. ராஜ் தாக்கரே

 
ஜாகிர் நாயக்

ஜாகிர் நாயக் முன்பு சொன்னதை சொன்ன  நுபுர் சர்மாவை  மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்கள், ஆனால் ஜாகிர் நாயக்கிடம் மன்னிப்பு கேட்கும்படி யாரும் கேட்கவில்லை என்று ராஜ் தாக்கரே தெரிவித்தார்.

ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பாக சில மாதங்களுக்கு முன் செய்தி தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நடந்த விவாதத்தில் பா.ஜ.க.வின் தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா பேசுகையில், நபிகள் நாயகத்துக்கு எதிராக பேசியதாக கூறப்படுகிறது. நுபுர் சர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை கைது செய்து தண்டனை வழங்கக்கோரி டெல்லி, உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்பட நாட்டின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. மேலும், நுபுர் சர்மாவை கொலை செய்வோம் என்று சிலர் கொலை மிரட்டல் விடுத்தனர். 

நுபுர் சர்மா

நுபுர் சர்மா தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்  என்று பலர் வலியுறுத்தினர் மேலும்  அவருக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் நீதிமன்றங்களில் பலர் வழக்கு தொடர்ந்தனர்.  இந்நிலையில், நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே குரல் கொடுத்துள்ளார். ராஜ் தாக்கரே செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: எல்லோரும் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டார்கள். நான் அவரை (நுபுர் சர்மா) ஆதரித்தேன். 

அமேசான் போஸ்டரை கிழித்த நவ்நிர்மான் சேனா கட்சி.. சம்மன் அனுப்பிய நீதிமன்றம்… சிக்கலில் ராஜ் தாக்கரே…

அவர் சொன்னதை டாக்டர் ஜாகிர் நாயக் முன்பே சொல்லியிருக்கிறார். மன்னிப்பு கேட்கும்படி நாயக்கிடம் யாரும் கேட்கவில்லை. நான் சிவ சேனாவில் இருந்தபோது, அதிக எம்.எல்.ஏ.க்கள் உள்ள கட்சிக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்று பாலாசாகேப் முடிவு செய்து இருந்தார். தீர்மானிக்கப்பட்ட விஷயங்களை எவ்வாறு மாற்றுவது?, அதுவும் மூடிய கதவுகளுக்கு பின்னால். பிரச்சாரத்தின்போது, தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக வருவார் என்று பிரதமரும், அமித் ஷாவும் கூறியபோது, நீங்கள் ஏன் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.