அதிர்ஷ்டத்தை தனது சாதனை என்று தவறாக புரிந்து கொள்ளும்போது வீழ்ச்சி தொடங்குகிறது.. ராஜ் தாக்கரே கிண்டல்

 
வீர் சாவர்க்கர் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் உருவாகி இருக்காது- உத்தவ் தாக்கரே பேச்சு

அதிர்ஷ்டத்தை தனது தனிப்பட்ட சாதனை என்று யாராவது தவறாக புரிந்து கொள்ளும்போது, அவரின் வீழ்ச்சியை நோக்கிய பயணம் அங்கு தொடங்குகிறது என்று உத்தவ் தாக்கரேவை ராஜ் தாக்கரே மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார்.

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள், மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றுள்ளனர். இதனால் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. இதனை தொடர்ந்து மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி முதல்வர் உத்தவ் தாக்கரேவைவுக்கு கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார்.

உச்ச நீதி மன்றம்
ஆனால் கவர்னர் உத்தரவை எதிர்த்து சிவ சேனா உச்ச நீதிமன்றம் சென்றது. ஆனால் உச்ச நீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு தடை விதிக்க மறுத்து விட்டது. இதனையடுத்து நேற்று முன்தினம் முதல்வர் உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து கடந்த சில நாட்களாக நிலவி வந்த மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்தது. இதன் தொடர்ச்சியாக பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் நடவடிக்கையை தொடங்கியது.

ராஜ்தாக்கரே

இந்நிலையில், முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததை அவரது மைத்துனர் ராஜ் தாக்கரே கிண்டல் செய்துள்ளார். மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரே டிவிட்டரில், ஒருவரின் நல்ல அதிர்ஷ்டத்தை ஒருவரின் தனிப்பட்ட சாதனை என்று யாராவது தவறாக புரிந்து கொள்ளும்போது, ஒருவரின் வீழ்ச்சியை நோக்கிய பயணம் அங்கு தொடங்குகிறது என பதிவு செய்து இருந்தார்.