உ.பி.யில் மத வழிபாட்டுதலங்களில் ஒலிபெருக்கிகளை அகற்றியதற்காக யோகிக்கு வாழ்த்து தெரிவித்த ராஜ் தாக்கரே

 
இது என்னடா மகாராஷ்டிரா அரசியலுக்கு வந்த சோதனை! ஒரு சீட் ஜெயிச்ச ராஜ் தாக்கரேவும் சரத் பவாருடன் சந்திப்பு!

உத்தர பிரதேசத்தில் மத வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிகளை அகற்றியதற்காக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே வாழ்த்து தெரிவித்தார். அதேசமயம் மகாராஷ்டிரா அரசை விமர்சனம் செய்தார்.

அண்மையில் நம் நாட்டின் சில பகுதிகளில் ராம நவமியன்று நடந்த மத ஊர்வலங்களின் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. இது இரு சமூகத்துக்கும் இடையிலான மோதலாக வெடித்தது. இதனால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எடுத்து வருகிறார். உத்தர பிரதேச மாநிலத்தில் அனுமதியின்றி எந்தவொரு மத ஊர்வலம், ஊர்வலம் நடத்த அனுமதி கிடையாது.  மத வழிபாட்டு தலங்களில் ஒலி பெருக்கிகளை அனுமதியுடன் பயன்படுத்தலாம் ஆனால் அந்த ஒலி சம்பந்தப்பட்ட வளாகத்துக்கு வெளியே கேட்கக் கூடாது என்றும் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

மசூதிகளில் ஒலி பெருக்கிகள்
இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. உத்தர பிரதேச அரசாங்கத்தின் புள்ளிவிவரத்தின்படி, கடந்த புதன்கிழமை மாலை 4 மணி வரை, அம்மாநிலத்தில் மத வழிபாட்டுத் தலங்களில் இருந்து 10,923 ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளன. 35,221 ஒலிபெருக்கிகளின் ஒலி அளவு குறைக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் மத வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிகளை அகற்றியதற்காக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே வாழ்த்து தெரிவித்தார். அதேசமயம் மகாராஷ்டிரா அரசை விமர்சனம் செய்தார்.

யோகி

ராஜ் தாக்கரே இது தொடர்பாக டிவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத வழிபாட்டுத் தலங்கள், குறிப்பாக மசூதிகள் ஆகியவற்றிலிருந்து ஒலிபெருக்கிகளை அகற்றியதற்காக யோகி ஆதித்யநாத் அரசுக்கு நான் முழு மனதுடன் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மகாராஷ்டிராவில் யோகிகள் (துறவிகள்) காணப்படவில்லை, அதற்கு பதிலாக போகிஸ் (சிற்றின்பவாதிகள்) மட்டுமே உள்ளனர். நான் பிரார்த்தனை செய்கிறேன், நல்ல உணர்வு மேலோங்கும் என்று நம்புகிறேன் என தெரிவித்து இருந்தார்.