முனுகோடு இடைத்தேர்தல்.. நில மாபியா, மணல் மாபியா, கிரானைட் மாபியா இதுதான் தெலங்கானா மாடல்... பா.ஜ.க. வேட்பாளர் தாக்கு

 
ராஜ் கோபால் ரெட்டி

நில மாபியா, மணல் மாபியா, கிரானைட் மாபியா இதுதான் தெலங்கானா மாதிரி என்று கே.சி. சந்திரசேகர் ராவ் தலைமயிலான தெலங்கானா மாநில அரசை பா.ஜ.க.வின் ராஜ் கோபால் ரெட்டி குற்றம் சாட்டினார்.

தெலங்கானாவில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் முனுகோடு சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக ஆனவர் ராஜ் கோபால் ரெட்டி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததோடு, காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். இதனையடுத்து முனகோடு சட்டப்பேரவை தொகுதிக்கு நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் ராஜ் கோபால் ரெட்டி பா.ஜ.க. சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

முழு லாக்டவுன் காலத்துக்கும் மின் கட்டணத்தை தள்ளுபடி செய்யுங்க….தெலங்கானா முதல்வருக்கு காங்கிரஸ் கடிதம்

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி பா.ஜ.க. வேட்பாளர் ராஜ் கோபால் ரெட்டி மீது பரபரப்பான குற்றச்சாட்டை ஒன்றை சுமத்தியது. அதாவது, மத்தியஅரசு ரூ.18 ஆயிரம் கோடி நிலக்கரி சுரங்க ஒப்பந்தத்தை ராஜ் கோபல் ரெட்டியின் குடும்பத்துக்கு சொந்தமான நிறுவனத்துக்கு வழங்கியது. அதன் பிறகு  தான் ராஜ் கோபால் ரெட்டி பா.ஜ.க.வில் இணைந்தார் என தெலங்கான ராஷ்டிரிய சமிதி கட்சி குற்றம் சாட்டியது. ஆனால் இதனை ராஜ் கோபால் ரெட்டி மறுத்துள்ளார். இது தொடர்பாக ராஜ் கோபால் ரெட்டி கூறியதாவது: தெலங்கானா மாதிரி என்ன? நில மாபியா, மணல் மாபியா, கிரானைட் மாபியா அதுதான் தெலங்கானா மாதிரி. 

பா.ஜ.க.

எனது குடும்ப வணிகம் 36 ஆண்டுகள் நடைபெறுகிறது. நிறுவனத்தை என் மகன் நடத்துகிறார். இது ஒரு டெண்டர் கிடைத்தது. கோல் இந்தியாவில், உலகளாவிய போட்டி டெண்டர். அதை பெரிய பிரச்சினையாக்கி விட்டார்கள். கே.சி.ஆர். (கே.சந்திரசேகர் ராவ்) நாமினேஷன் அடிப்படையில் நிறைய ஒப்பந்தங்கள் வழங்குகிறார். நான் தவறு செய்ததாக எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை. ஆதாரம் கொடுங்கள், அதை செய்யுங்கள். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது எனக்கு மரியாதை உண்டு. நாங்கள் (முன்பு காங்கிரஸில் இருந்தபோது) 12  எம்.எல்.ஏ.க்களை இழந்தபோது, மக்கள் காங்கிரஸ் கட்சியின் மீதான நம்பிக்கையை இழந்தார்கள். இந்த தொகுதி காங்கிரஸ் தொகுதி. நான் காங்கிரஸில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் பா.ஜ.க.வுக்கு மாறியபோது, என்னை நம்பியவர்களும் பா.ஜ.க. ஆதரவர்களாகவும் மாறி விட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.