நான் கேட்க விரும்புகிறேன் என்ற அணுகுமுறை பிரதமருக்கு வேண்டும். ஆனால் எங்கள் பிரதமர் கேட்கவில்லை.. ராகுல் காந்தி

 
ராகுல் காந்தி

நான் கேட்க விரும்புகிறேன் என்ற அணுகுமுறை பிரதமருக்கு இருக்க வேண்டும். ஆனால் எங்கள் பிரதமர் கேட்கவில்லை என பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். 

லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில் கூறியதாவது: இந்தியா நல்ல நிலையில் இல்லை. பா.ஜ.க.வினர் நாடு முழுவதும் மண்ணெண்ணெய் பரப்பியுள்ளனர். ஒரு தீப்பொறி ஏற்பட்டால், நாங்கள் பெரிய சிக்கலில் இருப்போம். மக்கள், சமூகங்கள், மாநிலங்கள் மற்றும் மதங்களை ஒன்றிணைப்பதும் எதிர்க்கட்சியான காங்கிரஸின் பொறுப்பு என்று நான் நினைக்கிறேன். இந்த வெப்பநிலையை நாம் குளிர்விக்க வேண்டும், ஏனெனில் வெப்பநிலை குளிர்ச்சியடையவில்லை என்றால், விஷயங்கள் தவறாகி விடும். நாங்கள் (காங்கிரஸ்) இந்திய மக்களின் கருத்தை கேட்கும் கட்சி. பா.ஜ.க. குரல்களை அடக்குகிறது. 

பா.ஜ.க.

நாங்கள் கேட்கிறோம், பா.ஜ.க. கூச்சல் மற்றும் குரல்களை அடக்குகிறது என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். நான் கேட்க விரும்புகிறேன் என்ற அணுகுமுறை பிரதமருக்கு இருக்க வேண்டும். ஆனால் எங்கள் பிரதமர் கேட்கவில்லை. பிரிவினை ஏற்படுத்துதல் மற்றும் ஊடகங்களின் ஒட்டுமொத்த ஆதிக்கம் ஆகியவை தேர்தலில் ஆளும் கட்சியின் (பா.ஜ.க.) வெற்றிகளுக்கு பின்னால் உள்ள காரணிகள். மேலும், ஆர்.எஸ்.எஸ். ஒரு கட்டமைப்பை கட்டமைத்துள்ளது, அது அதிக அளவிலான மக்களிடையே ஊடுருவியுள்ளது. காங்கிரஸூம் அத்தகையை கட்டமைப்பை உருவாக்க வேண்டும். 

மோடி

பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காத 60-70 சதவீத மக்களிடம் நாம் இன்னும் தீவிரமாக செல்ல வேண்டும், அதை நாம் ஒன்றாக செய்ய வேண்டும். ஒரு நிறுவனம் அனைத்து விமான நிலையங்கள், அனைத்து துறைமுகங்கள், அனைத்து உள்கட்டமைப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்துவது மிகவும் ஆபத்தானது என்று நான் நினைக்கிறேன். இது (தனியர் துறை ஏகபோகம்) இந்த வடிவத்தில் இருந்ததில்லை, அதிகாரம் மற்றும் மூலதனத்தின் பெரிய செறிவுடன் இது ஒருபோதும் இருந்ததில்லை. இந்தியா தனது மக்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை, அனைவருக்கும் சமமான அணுகல் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் நம்புகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.