மோடி அரசு அனைத்து பதவி, ஓய்வூதியம் இல்லை என்ற கொள்கையை கடைப்பிடிக்கிறது... ராகுல் காந்தி தாக்கு

 
ராகுல் காந்தி

சில முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான ஓய்வூதியம் கிடைக்கவில்லை என்ற தகவலை குறிப்பிட்டு, மோடி அரசு அனைத்து பதவி, ஓய்வூதியம் இல்லை என்ற கொள்கையை கடைப்பிடிக்கிறது என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

சில முன்னாள் ராணுவ வீரர்கள் தங்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான ஓய்வூதியம் கிடைக்கவில்லை என்று புகார் கூறினர். மேலும் இது தொடர்பாக அதிகாரிகள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். ஏப்ரல் 29 அல்லது 30 ஆகிய தேதிகளில் எங்களது ஓய்வூதியம் வரவு வைக்கப்படவில்லை, ஓய்வூதியதிற்காக இன்னும் காத்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

முன்னாள் ராணுவ வீரர்கள்

சமயம் கிடைக்கும் போதெல்லாம், பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் தாக்கி வரும் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சில முன்னாள் ராணுவ வீரர்கள் தங்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான ஓய்வூதியம் கிடைக்கவில்லை என விவகாரத்தையும் குறிப்பிட்டு மோடி அரசை விமர்சனம் செய்துள்ளார்.

பிரதமர் மோடி

ராகுல் காந்தி டிவிட்டரில், ஒரே பதவி, ஓரே ஓய்வூதியம் என்ற ஏமாற்றத்திற்கு பின், தற்போது மோடி அரசு அனைத்து பதவி, ஓய்வூதியம் இல்லை என்ற கொள்கையை கடைப்பிடிக்கிறது. ராணுவ வீரர்களை இழிவுப்படுத்துவது நாட்டை அவமதிக்கும் செயல். முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியத்தை அரசு விரைவில் வழங்க வேண்டும் என பதிவு செய்துள்ளார்.