வீர் சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஓய்வூதியம் பெற்றார், காங்கிரஸூக்கு எதிராக வேலை செய்தார்... ராகுல் காந்தி

 
சாவர்க்கர் 136…இந்துத்வாவின் தந்தை பிறந்த தினம்

வீர் சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஓய்வூதியம் பெற்றார், காங்கிரஸூக்கு எதிராக வேலை செய்தார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தற்போது இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். ராகுல் காந்தியின் இந்த நடைப்பயணம் தற்போது மகாராஷ்டிராவில் நடந்து கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவின் ஹிங்கோலி நகரில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில் கூறியதாவது: பிர்சா முண்டா (பழங்குடியினத்தை சேர்ந்தவர்) ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினார். அவருக்கு 24 வயதாக இருந்தபோது ஆங்கிலேயர்கள் அவரை கொன்றனர். பிர்சா முண்டா தனது 24 ஆண்டுகளில் அனைத்தையும் செய்தார். 

ராகுல் காந்தி

பிர்சா முண்டாவின் சித்தாந்தம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வால் தாக்கப்பட்டு வருகிறது. பழங்குடியின மக்களின் பெயரை ஆதிவாசி என்பதில் இருந்து வனவாசி என்று மாற்றியதன் பின்னணியில் அவர்கள் (பா.ஜ.க.) ஆழமான உத்திகளை கொண்டுள்ளனர். இதன் மூலம் அவர்கள் பல உரிமைகளை பறித்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் அரசியமைப்பு சட்டம் டாக்டர் அம்பேத்கரால் எழுதப்பட்டது. அப்போது பா.ஜ.க. எங்களுக்கு அரசியலமைப்பு வேண்டாம் என்று கூறியது. இப்போது அரசியலமைப்பை தொடர்ந்து தவறாக பயன்படுத்துகின்றனர். 

பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ்.

சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்தபோது ஆங்கிலேயர்களுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் தன்னை மன்னித்து  சிறையில் இருந்து விடுவிக்கும்படி வேண்டுகோள் விடுத்து இருந்தார். வீர் சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஓய்வூதியம் பெற்றார், காங்கிரஸூக்கு எதிராக வேலை செய்தார். சிறையில் இருந்து வெளியே வந்த சாவர்க்கர் ஆங்கிலேயர்களின் கோரிக்கையை ஏற்று அவர்கள் படையில் சேர்ந்தார். சாவர்க்கருக்கும் பிர்சா முண்டாவுக்கு உள்ள வித்தியாசம் என்னவென்றால், பிர்சா முண்டா தனது 24 வயதில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.