பிரதமரின் ஒரே வேலை தனது நண்பர்களை பணக்காரர்களாக்க சாமானியர்களிடம் இருந்து கொள்ளையடிப்பது... ராகுல் காந்தி

 

பிரதமரின் ஒரே வேலை தனது நண்பர்களை பணக்காரர்களாக்க சாமானியர்களிடம் இருந்து கொள்ளையடிப்பது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில், நம் நாட்டில் ஒவ்வொரு மணி நேரமும் தினசரி ஊதியம் பெறும் 5 இந்தியர்கள்  தற்கொலை செய்து கொள்கிறார்கள். பிரதமரின் விருப்பமான நண்பரின் சொத்துக்களில் ஒவ்வொரு மணி நேரமும் ரூ.85 கோடி சேர்கிறது. பிரதமரின் ஒரே வேலை அவரது நண்பர்களை பணக்காரர்களாக்க சாமானியர்களிடம் இருந்து கொள்ளையடிப்பது என பதிவு செய்து இருந்தார்.

ராகுல் காந்தி

பா.ஜ.க. இரண்டு இந்தியாவை உருவாக்கியுள்ளது. ஒன்று பணக்காரர்களுக்கு மற்றொன்று ஏழைகளுக்கு. பிரதமர் தனது நண்பர்கள் பணக்காரர்களாக மாற  உதவுகிறார் என ராகுல் காந்தி முன்பு குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் செப்டம்பர் 7ம் தேதி 3,500 கி.மீ. தூர பாரத் ஜேடோ யாத்ரா (இந்திய இணைப்பு பயணம்) என்ற பாதயாத்திரையை தொடங்குகிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பல மாநிலங்களில் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார்.

2014ம் ஆண்டு முதல் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தொழிலாளர்களுக்கு எதிரானது.. திக்விஜய சிங்

காங்கிரஸின் பாத யாத்திரை திட்டம் குறித்து அந்த கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் கூறுகையில், செப்டம்பர் 8ம் தேதி காலை யாத்திரை தொடங்கும், ஒவ்வொரு நாளும் 6 முதல் 7 மணி நேரம் நடந்து சென்று நாடு முழுவதும் உள்ள மக்களுடன் வெகுஜன தொடர்பை பெறுவார்கள். ராகுல் காந்தி எல்லா பாதைகளிலும் நடப்பார் . இடையே குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.