மோடியின் 8 ஆண்டுகால தவறான நிர்வாகம், வேகமான பொருளாதாரத்தை எப்படி அழிப்பது என்பதற்கான ஆய்வு.. ராகுல்

 
மோடி

மோடியின் 8 ஆண்டுகால தவறான நிர்வாகம், ஒரு காலத்தில் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்ததை எவ்வாறு அழிப்பது என்பது பற்றிய ஒரு ஆய்வு என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

நாட்டின் பெரும் பகுதிகள் நீண்ட மின்வெட்டுகளை எதிர்கொண்டுள்ளது. மத்திய அரசின் தவறான நிர்வாகம்தான் காரணம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மத்திய அரசின் தவறான நிர்வாகத்தால் கொளுத்தும் கோடையில் செயற்கை மின் நெருக்கடிக்கு வழிவகுத்தது என காங்கிரஸ் குற்றம் சாட்டியது. 

மின் வெட்டு

நாடு முழுவதும் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகம் செய்தவதற்கான போக்குவரத்து ஆதரவை மோடி அரசு வழங்கவில்லை என காங்கிரஸ் தெரிவித்தது. இந்த சூழ்நிலையில், மின் வெட்டு விவகாரத்தில் வயநாடு எம்.பி.யான ராகுல் காந்தியும் தன் பங்குக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார்.

ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில், மின் நெருக்கடி, வேலை நெருக்கடி, விவசாயிகள் நெருக்கடி, பணவீக்க நெருக்கடி. பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால தவறான நிர்வாகம், ஒரு காலத்தில் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்ததை எவ்வாறு அழிப்பது என்பது பற்றிய ஒரு ஆய்வு என பதிவு செய்து இருந்தார்.