பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். நாட்டில் உருவாக்கிய வெறுப்பு மற்றும் அச்சத்தால் 2 தொழிலதிபர்கள் மட்டுமே பயனடைகிறார்கள்.. ராகுல்

 
பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ்.

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். நாட்டில் உருவாக்கிய வெறுப்பு மற்றும் அச்சத்தால் இரண்டு தொழிலதிபர்கள் மட்டுமே பயனடைகிறார்கள் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் பணவீக்கத்துக்கு எதிராக காங்கிரஸின் பணவீக்கம் குறித்து பேசுங்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட பல முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர். மேலும், டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து காங்கிரஸ் தொண்டர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

ராகுல் காந்தி

அந்த கூட்டத்தில் வயநாடு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில், இந்தியாவில் வெறுப்பு அதிகரித்து வருகிறது. பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வெறுப்பு அதிகரித்து வருகிறது. பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்ஸூம் நாட்டை பிரித்து நாட்டில் அச்சத்தை உருவாக்குகிறார்கள். இந்த அச்சம் மற்றும் வெறுப்பால் நாட்டில் இரண்டு தொழிலதிபர்கள் மட்டுமே பயனடைகிறார்கள் என தெரிவித்தார்.

காங்கிரஸ்

முன்னதாக நேற்று விலைவாசி உயர்வுக்கு எதிராக போராட்டம் ஊர்வலம் நடத்திய காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் டெல்லி போலீசாரால் சிறிது நேரம் தடுத்து வைக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்கள் பங்கா பவனில் இருந்து அக்பர் சாலையில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.