காந்திஜி ஆங்கிலேய அரசை எதிர்த்து போரிட்டதை போல, அவரை கொன்ற சித்தாந்தத்துடன் இன்று நாம் போரில் ஈடுபட்டுள்ளோம்.. ராகுல்

 
ராகுல் காந்தி

காந்திஜி ஆங்கிலேய அரசை எதிர்த்து போரிட்டதை போல, காந்தியை கொன்ற சித்தாந்தத்துடன்  இன்று நாம் போரில் ஈடுபட்டுள்ளோம் என்று ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வை  ராகுல் காந்தி மறைமுகமாக தாக்கினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் உள்ளார். தற்போது காங்கிரஸின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் கர்நாடகாவில் நடந்து வருகிறது. மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு மைசூரில் படனவலுவில் உள்ள காதி கிராமோத்யோக்கில் உள்ள காந்தி சிலைக்கு ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி ஜெயந்தி விழாவில் ராகுல் காந்தி பேசுகையில் கூறியதாவது: இன்று மகாத்மா காந்தியின் 153வது பிறந்தநாளில், 1927ம் ஆண்டில் அவர் வருகை புரிந்த படனவாலு காதி கிராமேத்யாகா கேந்திராவில் நாம் இருக்கிறோம். 

மகாத்மா காந்தியவே ஒரு கோவிலுக்குள்ள விட முடியாதுன்னு சொல்லியிருக்காய்ங்க..! எந்தக் கோவில் தெரியுமா?

அந்த மகத்தான இந்தியாவின் மகனை நினைவுகூர்ந்து அவருக்கு மரியாதை செலுத்துகிறோம். அஹிம்சை, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் நீதியின் அவரது பாதையில் நாம் நடந்து கொண்டிருக்கும் ஒரு பாதயாத்திரையான இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் 25வது நாளில் நாம் இருக்கிறோம் என்பதன் மூலம் நமது நினைவாற்றல் மேலும் தீவிரமானது. காந்திஜி ஆங்கிலேய அரசை எதிர்த்து போரிட்டதை போல, காந்தியை கொன்ற சித்தாந்தத்துடன் (ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.) இன்று நாம் போரில் ஈடுபட்டுள்ளோம். 

பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ்.

இந்த சித்தாந்தம் கடந்த 8 ஆண்டுகளில் சமத்துவமின்மை, பிரிவினை மற்றும் நாம் கடினமாக வென்ற சுதந்திரத்தில் சிதைவை வழங்கியுள்ளது. இந்த ஹிம்சை மற்றும் அசாத்திய அரசியலுக்கு எதிராக, இந்திய ஒற்றுமை நடைப்பயணமானது, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அஹிம்சை மற்றும் ஸ்வராஜ்ஜின் செய்தியை பரப்பும். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு காந்தியின் பாரம்பரியத்தை பொருத்துவதற்கு வசதியானது ஆனால் அவரது அடிச்சுவடுகளில் நடப்பது கடினம்.