எதிர்க்கட்சிகள் ஒரு தொலைநோக்கு பார்வையுடன் திறம்பட நின்றால், பா.ஜ.க. தேர்தலில் வெற்றி பெறுவது கடினம்.. ராகுல் காந்தி

 
ராகுல் காந்தி

எதிர்க்கட்சிகள் ஒரு தொலைநோக்கு பார்வையுடன் திறம்பட நின்றால், பா.ஜ.க. தேர்தலில் வெற்றி பெறுவது கடினமாகி விடும் என்று ராகுல் காந்தி உறுதியாக தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய பிரதேச தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறப் போகிறது என்பதை எழுத்துப்பூர்வமாக என்னால் கொடுக்க முடியும். பா.ஜ.க.வை எங்கும் காண முடியாது. இதற்கு நான் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்க முடியும். பா.ஜ.க. பணத்தை பயன்படுத்தி மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைத்துள்ளது என்பது மத்திய பிரதேசத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும்.

பா.ஜ.க.

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக பெரும் அதிருப்தி நிலவுகிறது. பா.ஜ.க. மற்றும் காங்கிரஸூக்கு இடையேயான சண்டை இனி ஒரு தந்திரமான அரசியல் சண்டை அல்ல. எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மைய கருத்தியல் கட்டமைப்பு தேவை. அதை காங்கிரஸ் மட்டுமே வழங்க முடியும். ஆனால் எதிர்க்கட்சிகள் வசதியாக இருப்பதை உறுதி செய்வதே எங்கள் பங்கு. நாட்டின் அரசியல் வெளியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வரும் பா.ஜ.க.வை எதிர்கொள்வதில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் காங்கிரஸூக்கும் இடையே பரஸ்பர மரியாதை இருக்க வேண்டும்.

காங்கிரஸ்

எதிர்க்கட்சிகள் ஒரு தொலைநோக்கு பார்வையுடன் திறம்பட நின்றால், பா.ஜ.க. தேர்தலில் வெற்றி பெறுவது கடினமாகி விடும். ஆனால் எதிர்க்கட்சிகள் திறம்பட ஒருங்கிணைக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் மாற்றுக் கண்ணோட்டத்துடன் மக்களிடம் செல்ல வேண்டும்.  இந்தியா வாடகை தேடும் தேசத்திற்கு பதிலாக உற்பத்தி தேசமாக உருவாக வேண்டும். மருத்துவம், பொறியியல், சிவில் சர்வீசஸ் மற்றும் சட்டம் ஆகிய துறைகளுக்கு அப்பால் குழந்தைகளின் கற்பனைக்கு சிறகுகளை கொடுக்கக்கூடிய கல்வி கொள்கை இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பெரிய வணிகங்களுக்கு நான் ஆதரவாக இருக்கிறேன் ஆனால் அதை இரண்டு-மூன்று நபர்கள் கட்டுப்படுத்தக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.