மக்களவையில் பிரதமர் மோடி பேசியதை கேட்டபோது நான் அதிர்ச்சியடைந்தேன்.. ராகுல் காந்தி

 
மோடி

மக்களவையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்துக்கு (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ.) எதிராக பிரதமர் பேசியதை கேட்டபோது நான் அதிர்ச்சியடைந்தேன் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி தனது வயநாடு மக்களவை தொகுதிக்கு 3 நாள் பயணமாக கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்றார். ராகுல் காந்தி நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் கூறியதாவது: மக்களவையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்துக்கு (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ.) எதிராக பிரதமர் பேசியதை கேட்டபோது நான் அதிர்ச்சியடைந்தேன். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் தோல்விகளின் வாழும் நினைவுச்சின்னம் என்று அவர் அழைத்தார். 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம்

அவர் அதை (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ.) கருவூலத்தில் வடிகால் என்று அழைத்தார். இது எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ.-ன் ஆழத்தை பிரதமர் உண்மையில் புரியவில்லை என்பதை எனக்கு உணர்த்தியது. இந்திய தொழிலாளர் சந்தையை என்றென்றும் எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ. மாற்றியுள்ளது என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை.எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ., லட்சக்கான மற்றும் லட்சக்கணக்கான இந்திய மக்களுக்கு கடைசி முயற்சி மற்றும் மிகப்பெரிய பாதுகாப்பு என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி கடந்த வெள்ளிக்கிழமையன்று டிவிட்டரில், இரண்டு இந்தியாக்கள்: வரிவிலக்குகள் மற்றும் கடன் தள்ளுபடிகள் மூலம் பல ஆயிரக்கணக்கான கோடிகள் பணக்கார மிட்ரான்களுக்கு கரண்டியால் ஊட்டப்படுகிறது. ஏழை குழந்தைகள் அங்கன்வாடிகளில் சத்தான உணவு பெற ஆதார் வேண்டும் என மத்திய அரசை மறைமுகமாக தாக்கி பதிவு செய்து இருந்தார்.