மக்களை முட்டாளாக்குவதை நிறுத்துங்க.. பெட்ரோல் விலை மீண்டும் தினசரி உயரும்.. மத்திய அரசை தாக்கிய ராகுல்

 
ராகுல் காந்தி

பெட்ரோல் விலை மீண்டும் தினசரி 80 காசுகள் மற்றும் 30 காசுகள் என்ற அளவில் வளர்ச்சி (உயரும்) கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். மக்களை முட்டாளாக்குவதை அரசு நிறுத்த வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.

மத்திய அரசு கடந்த சனிக்கிழமையன்று பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்படுகிறது என அறிவித்தது. இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.5 ரூபாயும் டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும் என்றும் விலை குறைப்பின் மூலமாக மத்திய அரசுக்கு கலால் வரியின் மூலம் கிடைக்கக்கூடிய 1 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

பெட்ரோல் பம்ப்

இந்நிலையில், பெட்ரோல் விலை குறித்த புள்ளிவிவரத்தை குறிப்பிட்டு, மக்களை முட்டாளாக்குவதை அரசு நிறுத்த வேண்டும் என மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். காங்கிரஸின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி டிவிட்டரில்,பெட்ரோல் விலைகள்
2020 மே 1ம் தேதி ரூ.69.50
2022 மார்ச் 1ம்  தேதி ரூ.95.40
2022 மே 1ம் தேதி ரூ.105.40
2022 மே 22ம் தேதி ரூ.96.70

பணவீக்கம்

இப்போது, பெட்ரோல் விலை மீண்டும் தினசரி 80 காசுகள் மற்றும் 30 காசுகள் என்ற அளவில் வளர்ச்சி (உயரும்) கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். மக்களை முட்டாளாக்குவதை அரசு நிறுத்த வேண்டும். உச்சகட்ட பணவீக்கத்திலிருந்து உண்மையான நிவாரணம் பெற மக்கள் தகுதியானவர்கள் என பதிவு செய்துள்ளார்.