மக்களை திசை திருப்புவது உண்மைகளை மாற்றாது. இந்தியா இலங்கையை போல் வீழ்ச்சியை சந்திக்கிறது.. ராகுல் காந்தி
மக்களை திசை திருப்புவது உண்மைகளை மாற்றாது. இந்தியா இலங்கையை போல் வீழ்ச்சி நிலையில் உள்ளது என ராகுல் காந்தி தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவின் தற்போதைய நிலைமை, பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கையை போல் உள்ளதாக குற்றம் சாட்டினார். ராகுல் காந்தி தனது டிவிட்டரில், 3 செட் கிராப்களை பதிவேற்றம் செய்து, மக்களை திசை திருப்புவது உண்மைகளை மாற்றாது. இந்தியா இலங்கையை போல் தெரிகிறது என பதிவு செய்துள்ளார்.
முதல் செட் கிராப் (வரைபடம்), 2017ம் ஆண்டில் இருந்து இரு நாடுகளிலும் (இந்தியா, இலங்கை) வேலையின்மை அதிகரித்து 2020ம் ஆண்டில் உச்சத்தை எட்டியதை வரைபடங்கள் காட்டுகின்றன. 2020ம் ஆண்டில் கொரோனா வைரஸை எதிர்த்து போராட இந்தியா லாக்டவுனை விதித்தது. 2021ம் ஆண்டில் வேலையின்மை சற்று குறைகிறது. இரண்டாவது செட் கிராப் இந்தியா மற்றும் இலங்கை பெட்ரோல் விலையை ஒப்பிடுகிறது. இலங்கையில் 2017ம் ஆண்டு முதல் பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது. இந்தியாவில் 2019ம் ஆண்டு முதல் பெட்ரோல் விலை உயர்ந்து வருவதே காட்டுகிறது.
மூன்றாவது செட் கிராப் இரு நாடுகளிலும் வகுப்புவாத சம்பவங்கள் அதிகரித்துள்ளதை காட்டுகிறது. 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் இந்தியா மற்றும் இலங்கையில் வகுப்புவாத சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளதை கிராப் வெளிப்படுத்துகிறது. ராகுல் காந்தியின் இந்த டிவிட், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.