பா.ஜ.க. வெறுப்பை பரப்புகிறது. ஆனால் இந்தியா சகோதரத்துவம் ஒற்றுமை மற்றும் மரியாதைக்குரியது.. ராகுல் காந்தி

 
ராகுல் காந்தி

பா.ஜ.க. வெறுப்பை பரப்புகிறது. ஆனால் இந்தியா சகோதரத்துவம் ஒற்றுமை மற்றும் மரியாதைக்குரியது, அதனால்தான் இந்த நடைப்பயணம் வெற்றியடைந்துள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தற்போது பஞ்சாபில் நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் பதேகர் சாஹிப் நகரில் நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில் கூறியதாவது: பா.ஜ.க. வெறுப்பை பரப்புகிறது. ஆனால் இந்தியா சகோதரத்துவம் ஒற்றுமை மற்றும் மரியாதைக்குரியது, அதனால்தான் இந்த நடைப்பயணம் வெற்றியடைந்துள்ளது. இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். 

பா.ஜ.க.

விவசாயிகள், கடைக்காரர்கள், தொழிலாளர்கள், வேலையில்லாத இளைஞர்களிடம் பேசினேன். இந்த நடைப்பயணம்,இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சினைகளான வெறுப்பு, வன்முறை, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் ஆகியவற்றை எழுப்பி இந்த பிரச்சினைகளுக்கு எதிராக போராட வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். இந்த நடைப்பயணத்தில் நாங்கள் நீண்ட உரைகளை ஆற்றுவதில்லை. இந்த நடைப்பயணம் பேசுவது அல்லது கேட்பது. 

நடைபயணத்தின்போது ராகுல் காந்தி

நாங்களை காலை 6 மணிக்கு எழுந்த சுமார் 25 கி.மீ. நடந்து, அதன் பிறகு 6 முதல் 7 மணி நேரம் உங்கள் அனைவரது பேச்சையும் கேட்கிறோம். அதன் பிறகு நாங்கள் 10 முதல் 15 நிமிடங்கள் எங்கள் பார்வைகளை வைத்துள்ளோம். இந்த நடைப்பயணத்தின் ஆன்மா கேட்பது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்திய ஒற்றுமை நடைப்பயணம் ஜம்மு அண்ட் காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்குள் நுழைவதற்கு முன்னதாக, இம்மாதம் 19ம் தேதியன்று பதான்கோட்டில்  ஒரு பேரணி நடத்த காங்கிரஸ் நடத்த உள்ளதாக தகவல்.