பா.ஜ.க. அரசு உங்களுக்கு எதையும் தராது, உங்களிடமிருந்து அனைத்தையும் பறிக்கும்... ராகுல் காந்தி குற்றச்சாட்டு

 
ராகுல் காந்தி

பா.ஜ.க. அரசு உங்களுக்கு எதையும் தராது, உங்களிடமிருந்து அனைத்தையும் பறிக்கும் என குஜராத் பழங்குடி மக்களிடம் ராகுல் காந்தி தெரிவித்தார்.

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பா.ஜ.க., ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை ஏற்கனவே தொடங்கி விட்டன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று அம்மாநிலத்தில் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். ராகுல் காந்தி குஜராத்தின் பழங்குடியினர் அதிகம் வாழும் தஹோத் மாவட்டத்தில் ஆதிவாசி சத்தியாகிரக பேரணியை தொடங்கி வைத்தார். அந்த பேரணியில் ராகுல் காந்தி பேசுகையில் கூறியதாவது: 

பா.ஜ.க.

2014ல் நரேந்திர மோடி ஜி இந்தியாவின் பிரதமரானார். அதற்கு முன் அவர் குஜராத் முதல்வராக இருந்தார். குஜராத்தில் தொடங்கிய  பணியை, நாட்டில் செய்து வருகிறார். இது குஜராத் மாடல் என்று அழைக்கப்படுகிறது. இன்று, இரண்டு இந்தியா உருவாக்கப்படுகிறது. பணக்காரர்களின் இந்தியா,  ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள், அதிகாரம் மற்றும் பணம் உள்ள கோடீஸ்வரர்கள் மற்றும் அதிகாரத்துவம் கொண்டவர்கள். இரண்டாவது இந்தியா, சாமானிய மக்களுடையது. இரு இந்தியாவை காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை. பா.ஜ.க. மாதிரியில், பழங்குடியினர் மற்றும் பிற ஏழைகளுக்கு சொந்தமான நீர், காடு, நிலம் போன்ற மக்களின் வளங்கள் சிலருக்கு வழங்கப்பட்டு வருகின்றன. 

பிரதமர் மோடி

பா.ஜ.க. அரசு உங்களுக்கு எதையும் தராது, உங்களிடமிருந்து அனைத்தையும் பறிக்கும். நீங்கள் (பழங்குடியினர்) உங்கள் உரிமைகளை பறிக்க வேண்டும், அப்போதுதான் உங்களுக்கு சொந்தமானது கிடைக்கும். பழங்குடியின மக்கள் தங்கள் கடின உழைப்பின் மூலம் குஜராத்தில் சாலைகள்,பாலங்கள், கட்டிடங்கள் மற்றம் உள்கட்டமைப்புகளை உருவாக்குகிறார்கள். ஆனால் அதற்கு ஈடாக உங்களுக்கு என்ன கிடைத்தது? உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. நல்ல கல்வியும் இல்லை, சுகாதார சேவையும் இல்லை. தொற்றுநோய்களின்போது, குஜராத்தில் 3 லட்சம் பேர் இறந்தபோது, பானைகளையும், சட்டிகளையும் (பால்கனியில் இருந்து) அடித்து, உங்கள் மொபைல் விளக்குகளை ஒளிரச் செய்யுங்கள் என்று பிரதமர் கூறினார். இறந்தவர்களின் உடல்களால் கங்கை நதி நிரம்பியது. கொரோனா வைரஸால் நாட்டில் 50 முதல் 60 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.