42 சதவீத இளைஞர்களுக்கு வேலை இல்லை, பாரதத்தின் எதிர்காலம் பாதுகாப்பானதா?... ராகுல் காந்தி கேள்வி

 
ராகுல் காந்தி

42 சதவீத இளைஞர்களுக்கு வேலை இல்லை, பாரதத்தின் எதிர்காலம் பாதுகாப்பானதா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான  இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். சுமார் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீட்டர் தொலைவுக்கு ராகுல் காந்தி இந்த பயணத்தை மேற்கொள்கிறார். இந்த யாத்திரையின் 4வது நாளான நேற்று ராகுல் காந்தி வேலையின்மை விவகாரத்தை முன்னிலைப்படுத்தினார்.

4 மாதத்தில் வேலையிழந்த 2 கோடி பேர்… வேலையின்மை உண்மையை மறைக்க முடியாது… ராகுல் காந்தி ஆவேசம்

ராகுல் காந்தி நேற்று நடைப்பயணம் மேற்கொள்ளும்போது, வேலைக்காக நடக்கிறேன் என்ற வாசகம் இடம் பெற்ற டி.சர்ட் அணிந்த இளைஞர்கள் அவருடன் இணைந்து நடந்தனர். ராகுல் காந்தி டிவிட்டரில், நமது இளைஞர்களில் 42 சதவீதம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். அவர்களுடையது இல்லையென்றால் பாரதத்தின் எதிர்காலம் பாதுகாப்பானதா? அவர்களுக்காக நாங்கள் நடக்கிறோம். நாங்கள் வேலைக்காக நடக்கிறோம் என பதிவு செய்து இருந்தார்.

நடைபயணத்தின்போது ராகுல் காந்தி

ராகுல் காந்தி கடந்த வெள்ளிக்கிழமையன்று டிவிட்டரில், நமது நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான திவால்நிலையை இந்தியா இப்போது எதிர்கொள்கிறது. நாங்கள் கார்ப்பரேட் இந்தியாவுக்காக இருக்கிறோம். நாங்கள் பாரிய ஏகபோக யோசனைக்கு எதிரானவர்கள். நாங்கள் அநீதிக்கு எதிரானவர்கள் அது விவசாயிகள் அல்லது குறு சிறு மற்றும் நடுத்த நிறுவனங்களுக்கு எதிராக இருந்தாலும் சரி, நியாயம் மேலோங்க நாங்கள் செயல்படுவோம் என பதிவு செய்து இருந்தார்.