ராகுல் டிசர்ட் திருப்பூரில் வாங்கியது; 4 டிசர்ட் வாங்கினோம்..40 ஆயிரம் கிடையாது; ஆனால்..

 
ra

 ராகுல் டி சர்ட் திருப்பூரில் தான் வாங்கினோம்.  நாலு  டிசர்ட் வாங்கினோம்.  அது 40 ஆயிரம் ரூபாய் கிடையாது.  ஆனால் மோடி அணிந்திருக்கும் ஆடை தான் 10 லட்சம் ரூபாய் மதிப்புடையது என்று விளக்கம் அளித்திருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி.

ra

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கி இருக்கிறார்.  கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை இந்த பாத யாத்திரையை மேற்கொள்கிறார்.  150 நாட்களில் 3500 கிலோ மீட்டர் தூரம் இந்த பாதயாத்திரை மேற்கொள்கிறார்.   இன்று அவர் 4வது நாள் பாத யாத்திரையை மேற்கொண்டார்.

 ராகுலின் இந்த பாதயாத்திரைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் பாஜகவினர் இதை  கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாஜகவினர்  தங்களது டுவிட்டர் பக்கங்களில் இரண்டு புகைப்படங்களை பதிவிட்டு விமர்சித்து வந்தனர்.  ஒன்று ராகுல் காந்தியின் புகைப்படம்.  மற்றொன்று அவர் அணிந்திருந்தது போன்ற ஒரு டீசர்ட்டின் விளம்பர படம். 

t

அந்த டி சர்ட்  கம்பெனி,  அந்த டிசர்ட்டின் விலை ஆகியவற்றையும் அதில் குறிப்பிட்டனர்.  அந்த  பர்பரி டி ஷர்ட்டின் விலை ரூ.41.257 என்று உள்ளது.  இந்த பதிவு வைரலாகி வருகிறது.   இதற்கு பதிலடியாக காங்கிரசாரும் பிரதமர் மோடியின் ஆடையை  குறிப்பிட்டு அந்த  ஆடை  பத்து லட்சம் ரூபாய் என்று பதிவிட்டு, ஆயிரங்கள் பெருசா? லட்சங்கள் பெருசா?  என்று  பதிலடி கொடுத்து வந்தனர்.

ks

இந்நிலையில்,   இந்த விவகாரம் குறித்து  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.   ராகுல் காந்தி அணிந்திருக்கும் டிசர்ட் திருப்பூரில் வாங்கப்பட்ட டிசர்ட்.   நடைபயணத்திற்காக 20,000 டி சர்ட்  திருப்பூரில் அடித்துள்ளோம்.   இதில் தொண்டர்கள் பயன்படுத்தும் டிசர்ட்டில் தலைவர்களின் படங்கள் போடப்பட்டிருக்கிறது.  ராகுலுக்காக நான்கு டி சர்ட் படங்கள் இல்லாமல் அடிக்கப்பட்டன.  அது 40 ஆயிரம் ரூபாய் இல்லை .  நாலு லட்சம் ரூபாயும் இல்லை.  மோடி தான் 10 லட்சம் ரூபாயில் கோட் அணிந்து உள்ளார் என்று தெரிவித்திருக்கிறார்.