நம் பகுதியில் சீனா அமர்ந்திருப்பதாக ராணுவம் கூறியது ஆனால் யாரும் வரவில்லை என்றார் பிரதமர் மோடி... ராகுல் காந்தி

 
ராகுல் காந்தி, கமல் ஹாசன்

நம் பகுதியில் அவர்கள் (சீன வீரர்கள்) அமர்ந்திருப்பதாக நமது ராணுவம் தெளிவாக கூறியது ஆனால் யாரும் வரவில்லை என்று பிரதமர் மோடி கூறினார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பிரபல நடிகர் கமல்ஹாசன் அண்மையில் பங்கேற்றார். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனுடன், தான் உரையாடியது தொடர்பான வீடியோ ஒன்றை ராகுல் காந்தி தனது யூ டியூப் சேனலில்  வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பும், இந்தியா-சீனா இடையிலான எல்லை மோதலுக்கும் இடையே உள்ள ஒற்றுமை உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

எல்லையில் இந்திய, சீன வீரர்கள்

அந்த வீடியோவில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: உக்ரைனில் ரஷ்யர்கள் என்ன செய்தார்கள், உக்ரைனியர்கள் மேற்கு நாடுகளுடன் வலுவான உறவை கொண்டிருப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று அவர்கள் (ரஷ்யா) சொன்னார்கள். அதே கொள்கையை இந்தியாவில் சீனா பயன்படுத்தலாம். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள் என்று சீனர்கள் நம்மிடம் கூறுகிறார்கள். 

மோடி

ஏனென்றால் நாங்கள் உங்கள் புவியியலை மாற்றுவோம், நாங்கள் லடாக்கிற்குள் நுழைவோம், அருணாசல பிரதேசத்திற்குள் நுழைவோம். ராணுவம் நம் பகுதியில் அவர்கள் (சீன வீரர்கள்) அமர்ந்திருப்பதாக  தெளிவாக கூறியது ஆனால் யாரும் வரவில்லை என்று பிரதமர் மோடி கூறினார். இது சீனாவுக்கு மிகத் தெளிவான செய்தியை அனுப்புகிறது. நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், அதற்கு இந்தியா எதிர்வினையாற்றாது என்பதே இதன் செய்தியாகும். இது இந்தியாவின் முழு பேச்சுவார்த்தை நிலையையும் அழிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்தார்.