யங் இந்தியா நிறுவனத்துக்கு சீல்.. இது மிரட்டும் முயற்சி, இது எனக்கும், கட்சிக்கும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.- ராகுல்

 
ராகுல் காந்தி

யங் இந்தியா நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது மிரட்டும் முயற்சி, இது எனக்கும், கட்சிக்கும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் பணமோசடி தொடர்பாக டெல்லியில் உள்ள ஹெரால்டு ஹவுஸில் அமலாக்கத்துறையினர் கடந்த சில தினங்களுக்கு முன் சோதனை நடத்தினர். சோதனை நடத்திய அதற்கு அடுத்த நாளில்  ஹெரால்டு ஹவுஸில் உள்ள யங் இந்தியா நிறுவனத்துக்கு அமலாக்கத்துறை  சீல் வைத்தனர். இது தொடர்பாக ராகுல் காந்தி கூறுகையில், இது மிரட்டல் தந்திரங்கள் என்றும், இவை தனக்கும், கட்சிக்கும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று தெரிவித்தார்.

யங் இந்தியா அலுவலகத்துக்கு சீல் வைப்பு

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இது மிரட்டும் முயற்சி. அழுத்தம் கொடுத்து நம்மை அமைதிப்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். நரேந்திர மோடி ஜி மற்றும் அமித் ஷா ஜி என்ன செய்கிறார்கள், ஜனநாயகத்துடன், நாங்கள் அதை எதிர்த்து நிற்பபோம், என்ன நடந்தாலும்.

அமித் ஷா, மோடி

இது (அமலாக்கத்துறை நடவடிக்கைகள்) எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஒடிப்போவதைப் பற்றி யார் பேசுகிறார்கள்? நாங்கள் பயப்பட மாட்டோம். நாடு, ஜனநாயகம், நல்லிணக்கம் ஆகியவற்றை பாதுகாக்க தொடர்ந்து பாடுபடுவேன். அவர்கள் என்ன செய்தாலும் என் வேலையை செய்வேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.