பணவீக்கம் என்பது அனைத்து இந்தியர்களின் மீதான வரி, மக்களை பாதுகாக்கவும்.. மத்திய அரசை வலியுறுத்திய ராகுல்

 
ராகுல் காந்தி

பணவீக்கம் என்பது அனைத்து இந்தியர்களின் மீதான வரி ஆகையால் அதிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்று மத்திய அரசை ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. மேலும் சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பாமாயில் போன்றவற்றின் விலையும் உயர்ந்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளபோதிலும், உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை. 

சூரியகாந்தி எண்ணெய்

அதேசமயம், சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது, இதனால் நடுத்தர வர்த்தகத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பணவீக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்கும்படி மத்திய அரசை ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில், பணவீக்கம் என்பது அனைத்து இந்தியர்களின் மீதான வரி. உக்ரைன் போர் தொடங்கும் முன்பே அதிக விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை நசுக்கியது. 

இந்த வாரம் பணவீக்கம், நிதிநிலை முடிவுகள் போன்றவற்றை கவனிச்சுகோங்க.. பங்குச் சந்தை நிபுணர்கள் அட்வைஸ்

இது மேலும் அதிகரிக்கும்: கச்சா எண்ணெய் விலை 100 டாலரை (பேரல்) அதிகரிக்கும், உணவு பொருட்களின் விலை 22 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவிட் உலகளாவிய விநியோக சங்கிலியை சீர்குலைக்கிறது. மத்திய அரசு இப்போது செயல்பட வேண்டும். மக்களை பாதுகாக்கவும் என்று பதிவு செய்து இருந்தார்.