8 வருட பெரிய பேச்சுகளின் விளைவு.. இந்தியாவில் வெறும் 8 நாட்கள் நிலக்கரி கையிருப்பு உள்ளது.. மோடியை தாக்கிய ராகுல்

 
பிரதமர் மோடி

8 வருட பெரிய பேச்சுகளின் விளைவாக இந்தியாவில் வெறும் 8 நாட்கள் நிலக்கரி கையிருப்பு உள்ளது என பிரதமர் மோடியை ராகுல் காந்தி தாக்கினார்.  

ராகுல் காந்தி டிவிட்டரில், நிலக்கரி துறை பல தசாப்தங்களாக முடக்கப்பட்ட நிலையில் இருந்து வெளியேற்றப்பட்டது-பிரதமர் மோடி பெரிய நடவடிக்கை அறிவிக்கிறார் என்று 2020 ஜூன் 18ல் வெளியான செய்தி, மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு குறைந்ததால் இந்தியா மின்வெட்டை எதிர்நோக்கிறது என 2022 ஏப்ரல் 19ல் (நேற்று முன்தினம்) வெளியான செய்திகளின் தலைப்புகளை மட்டுமே இமேஜ்யாக பதிவேற்றம் செய்து இருந்தார். 

நிலக்கரி விற்று ரூ.4,638 கோடி லாபம் பார்த்த கோல் இந்தியா

மேலும், 8 வருட பெரிய பேச்சுகளின் விளைவாக இந்தியாவில் வெறும் 8 நாட்கள் நிலக்கரி கையிருப்பு உள்ளது. மோடி ஜி, தேக்கம் அதிகரித்து வருகிறது. மின்வெட்டு சிறு தொழில்களை நசுக்கும், அதிக வேலை இழப்புகளுக்கு வழிவகுக்கும். வெறுப்பின் புல்டோசர்களை அணைத்து, மின் உற்பத்தி நிலையங்களை இயக்கவும் என ராகுல் காந்தி பதிவு செய்து இருந்தார். 

ராகுல் காந்தி

உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வகுப்புவாத வன்முறை மற்றும் பிற கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துக்களை புல்டோசர்கள் பயன்படுத்தி அழிக்கப்படுகிறது. இதனைதான் வெறுப்பின் புல்டோசர்கள் என்று ராகுல் காந்தி மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் என கூறப்படுகிறது.