குஜராத்தில் போதைபொருள் விற்பனை.. பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி நச்சன்னு 4 கேள்விகள்

 
ராகுல் காந்தி

குஜராத்தில் போதைபொருள் விற்பனை நடப்பது தொடர்பாக பிரதமர் மோடியிடம் 4 கேள்விகளை ராகுல் காந்தி கேட்டுள்ளார்.


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி, வேலையின்மை, பொருளாதார வீழ்ச்சி, பணவீக்கம் உள்பட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். தற்போது குஜராத்தில் போதை பொருள் விற்பனை நடப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு 4 கேள்விகளை ராகுல் காந்தி கேட்டுள்ளார்.

போதை மருந்து
 
ராகுல் காந்தி டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், குஜராத்தில் எளிதாக போதை பொருள் வியாபாரம்?. சார் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கவும். 1. ஆயிரக்கணக்கான கோடி போதை பொருட்கள் குஜராத்தை அடைகின்றன. காந்தி-படேலின் புண்ணிய பூமியில் விஷத்தை பரப்புவது யார்? 2. பலமுறை போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட போதிலும், துறைமுக உரிமையாளரிடம் இதுவரை ஏன் விசாரணை நடத்தப்படவில்லை?

மோடி

3.என்.சி.பி. மற்றும் பிற அரசு நிறுவனங்களால் இதுவரை குஜராத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யும் நார்கோஸ்களை ஏன் பிடிக்க முடியவில்லை? 4. மாபியா நண்பர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் மத்திய, குஜராத் அரசுகளில் அமர்ந்திருப்பவர்கள் யார்?. பிரதமரே, எவ்வளவு காலம் மவுனம் காக்கப் போகிறீர்கள், பதில் கொடுக்கப்பட வேண்டும். என பதிவு செய்துள்ளார்.