காதி விவகாரம்.. பிரதமரின் வார்த்தைகளும் செயல்களும் ஒரு போதும் ஒத்துப்போவதில்லை... ராகுல் காந்தி தாக்கு

 
ராகுல் காந்தி

நாட்டு மக்கள் காதியை பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டதை குறிப்பிட்டு, பிரதமரின் வார்த்தைகளும், செயல்களும் ஒருபோதும் ஒத்துப்போவதில்லை என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றங்கரையில் நடைபெற்ற காதி உத்சவ் (காதி திருவிழா) நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ஒரு காலத்தில் சுயமரியாதையின் அடையாளமாக காதி இருந்தது. ஆனால் சுதந்திரத்திற்கு பிறகு காதி ஒரு தரக்குறைவான பொருளாக கருதப்பட்டது.  வரும் பண்டிகை காலத்தில் காதி கிராம தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருட்களை தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிசளிக்க வேண்டும். 

மோடி

மக்கள் பல்வேறு வகையான துணிகளால் செய்யப்பட்ட ஆடைகளை வைத்திருக்கலாம். ஆனால் நீங்கள் அதில் காதிக்கு இடம் கொடுத்தால், உள்ளூர் ( உள்நாட்டு தயாரிப்புகள் வாங்குதல்) பிரச்சாரத்துக்கான குரல் வேகத்தை அதிகரிக்கும் என தெரிவித்தார். பிரதமர் மோடி காதி துணிகளுக்கு ஆதரவாக பேசியதை, தேசிய கொடி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுடன் ஒப்பிட்டு பிரதமரின் வார்த்தைகளும் செயல்களும் ஒரு போதும் ஒத்துப்போவதில்லை  ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

காதி துணி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி டிவிட்டரில், தேசத்திற்கு காதி ஆனால் தேசிய கொடிக்கு சீன பாலிஸ்டர். எப்போதும் போல, பிரதமரின் வார்த்தைகளும் செயல்களும் ஒரு போதும் ஒத்துப்போவதில்லை என பதிவு செய்துள்ளார்.