ராகவன் வீடியோ - சூர்யாசிவா ஆடியோ: ஜோதிமணி விளாசல்

 
j

பாஜக நிர்வாகிகள் சூர்யாசிவா- டெய்ஸி சரண் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருவரும் ஆபாசமாக பேசிக் கொள்ளும் ஆடியோ ஊடகங்களில், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  இது குறித்து கண்டனம் தெரிவித்து விமர்சித்த காயத்ரி ரகுராம் கட்சியை விட்டு இடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். இதற்கு முன்னதாக பாஜக நிர்வாகி ராகவன் வீடியோ விவகாரத்தில் காங்கிரஸ் கரூர் எம்பி ஜோதிமணி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.

 இந்த நிலையில் தற்போது சூர்யா சிவாவின் ஆடியோ விவகாரத்திலும் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருக்கிறார்.  மேலும் உண்மையை அம்பலப்படுத்திய காயத்ரி ரகுராம் இடைநிலை நீக்கம் செய்யப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

ra

’’ஆர். எஸ். எஸ் , பாஜக சித்தாந்தம் அடிப்படையில் பெண்களுக்கு எதிரானது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட கொடும் குற்றங்களைச் செய்த குற்றவாளிகளை வெட்கமற்று ஆதரிப்பது, பாதுகாப்பது, பாதிக்கப்பட்ட பெண்களை அவர்கள் பாதுகாத்ததாக வரலாறு கிடையாது.  பாஜகவின் ராகவன் , பாஜகவைச் சார்ந்த பெண்ணிடம் பாலியல் வக்கிரத்துடன் நடந்துகொண்டதை விசாரிக்க பாஜக ஒரு கமிட்டி அமைத்தது. அது என்ன ஆனது? அந்த அறுவெறுக்கத்தக்க செயலை வெளிக்கொண்டு வந்தவர்கள்தான்  பாஜகவிலிருந்து நீக்கப்பட்டனர். 

de

ராகவன் அல்ல.  இன்றும் பாஜகவைச் சேர்ந்த சகோதரி  பாஜகவின் மீது விமர்சனங்களை வைத்துள்ளார்.  காசு கொடுத்து சமூக ஊடகங்களில் லைக்குகள் வாங்குவதை அம்பலப்படுத்தியுள்ளார்.  இதனால் அவர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாஜக முற்றிலும் பெண்களுக்கு எதிரான கட்சி என்பது இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது’’ என்கிறார் ஜோதிமணி.