பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மியின் வெற்றி சாதாரண வெற்றியல்ல, அது ஒரு அதிசயம்... ராகவ் சதா பெருமிதம்

 
ஆம் ஆத்மி

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மியின் வெற்றி சாதாரண வெற்றியல்ல. அது ஒரு அதிசயம் என அந்த கட்சியின் ராகவ் சதா தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவரான ராகவ் சதா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அரவிந்த் கெஜ்ரிவால் ஒருபயங்கரவாதி அல்ல ஆனால் ஒரு வளர்ச்சிவாதி மற்றும் கல்வியாளர் என்பதை பஞ்சாப் மக்கள் காட்டினர். மாநிலத்தில் உள்ள அனைத்து ஊழல் சக்திகளுக்கும் அவர்கள் (மக்கள்) நல்ல பாடம் புகட்டினார்கள். 

ராகவ் சதா

அரவிந்த் கெஜ்ரிவால் தேசிய தலைநகரில் (டெல்லி யூனியன் பிரதேசம்) ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மக்கள் அங்கு ஒவ்வொரு தேர்தலிலும் ஐ லவ் யூ கெஜ்ரிவால் என்று கூறி வருகின்றனர். இது போன்ற போக்கு பஞ்சாபிலும் தொடரும், அங்கு மக்கள் பகவத் மானின் பணியை பார்த்த பிறகு அவரை விரும்புவதாக சொல்வார்கள். 

அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மியின் வெற்றி சாதாரண வெற்றியல்ல. இது ஒரு அதிசயம். பஞ்சாப் மக்கள் இன்று கெஜ்ரிவால்-மான் ஜோடியை விரும்புகிறார்கள் என்பதை நிரூபித்துள்ளனர். காங்கிரஸின் தேசிய மற்றும் இயற்கையான மாற்றாக ஆம் ஆத்மி கட்சி உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் பா.ஜ.க.வுக்கு முக்கிய போட்டியாளராக மாறுவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.