அதிமுகவின் 50 எம்எல்ஏக்கள், 2 எம்பிக்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்- ஆர்.எஸ்.பாரதி
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் அமைப்புச்செயலாளர் ஆர்எஸ் பாரதி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “அதிமுகவின் 50 எம்எல்ஏக்கள், 2 எம்பிக்கள், 30 மாவட்ட செயலாளர்கள் எங்களுடன் தொடர்பில் உளனர். அதிமுகவில் உள்ள அனைவரும் திமுகவில் இணைந்து பயணிக்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமியுடன் தொடர்பில் இருக்கும் திமுகவினரின் பட்டியலை அவர், வெளியிட்டால் தன்னோடு தொடர்பில் உள்ள அதிமுகவினரின் பெயரை தாமும் வெளியிடுவேன். தன்னுடன் திமுகவைச் சேர்ந்த சிலர் தொடர்பில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறிய பொய்யால், அவரும் அதிமுகவினரும் குழம்பிப் போயுள்ளனர். பொய் பேசியே, எல்லோருக்கும் காது குத்தலாம் என எண்ணியிருக்கும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, குழப்பத்தில் இருக்கிறார்
அதிமுகவிலிருந்து பலபேர் திமுகவிற்கு வந்துள்ளனர். திமுகதான் திராவிட இயக்கம். காஷ்மீர் - கன்னியாகுமரி வரை எல்லா தமிழரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவையே காட்டிக்கொடுக்கிறார். எந்தவித பொறுப்பிலும் இல்லாத சசிகலாவை சட்டமன்றத்தில் உட்கார வைத்தார் ஜெயலலிதா. அரசு நிகழ்ச்சிகளிலும் அமர வைத்தார் எனக் கூறுகிறார். எடப்பாடியே சசிகலா காலில் விழுந்தவர்தானே.
ராகுலின் நடைபயணம் பாஜகவிற்கு அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது” எனக் கூறினார்.