பகுஜன் சமாஜ் கட்சியின் மோசமான செயல்பாடே எதிர்க்கட்சிகளின் தோல்விக்கு காரணம்.. ஜெயந்த் சவுத்ரி

 
ஜெயந்த் சவுத்ரி

மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் மோசமான செயல்பாடே எதிர்க்கட்சிகளின் தோல்விக்கு காரணம் என ஜெயந்த் சவுத்ரி கூறினார்.

சமீபத்தில் நடந்து முடிந்த உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியுடன் ராஷ்டிரிய லோக் தளம் (ஆர்.எல்.டி.) கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் ஆர்.எல்.டி. 33 தொகுதிகளில்போட்டியிட்டது, ஆனால் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. உத்தர பிரதேச தேர்தல் பிறகு முதல் முறையாக ஆர்.எல்.டி. தலைவர் ஜெயந்த் சவுத்ரி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது ஜெயந்த் சவுத்ரி கூறியதாவது: 2013ல் வகுப்புவாத கலவரங்களால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளான முசாபர்நகர், ஷாம்லி மற்றும் மீரட் ஆகிய இடங்களில் பா.ஜ.க.வை தோற்கடித்தோம். 

பா.ஜ.க.

கைரானாவில் இந்துக்கள் வெளியேறும் பிரச்சினையை அவர்கள் (பா.ஜ.க.) தூண்டினர், நாங்கள் அவர்களை அங்கே தோற்கடித்தோம். மேற்கு உத்தர பிரதேசத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவர்களான சங்கீத் சோம், உமேஷ் மாலிக் மற்றும் சுரேஷ் ரானா போன்றவர்கள் தோல்வியை சந்தித்தனர். விவசாயிகளின் போராட்டம் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. பொதுமக்களிடம் எங்களது செய்தியை திறம்பட தெரிவிக்கவில்லை. பல இடங்களில் 500க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் நாங்கள் தோற்றுவிட்டோம். 

வெங்கையா நாயுடு சொன்னதை மோடி அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும்.. பகுஜன் சமாஜ் கட்சி வலியுறுத்தல்..

மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் மோசமான செயல்பாடே எதிர்க்கட்சிகளின் தோல்விக்கு காரணம். இந்த தேர்தலில் நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். 2024 மக்களவை தேர்தலில் அகிலேஷ் யாதவுடன் இணைந்து போட்டியிடுவோம் என்று என்னால் சொல்ல முடியும். பா.ஜ.க. மீது மக்களுக்கு அதிருப்தி இருந்தாலும், மக்கள் அதை தங்கள் வாக்குகளில் பிதிபலிக்கவில்லை. எதிர்க்கட்சியாக இருந்து முக்கிய பிரச்சினைகளை எழுப்புவோம். 80 வெர்சஸ் 20 கதையை மேலும் சொல்ல பா.ஜ.க.வை அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.