பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி இன்னும் நிறைவேறவில்லை.. மனோஜ் குமார் ஜா

 
மனோஜ் குமார் ஷா

பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி இன்னும் நிறைவேறவில்லை என ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மனோஜ் குமார் ஜா தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும் சரத் யாதவை தனது அரசியல் குரு என்று ராகுல் காந்தி தெரிவித்தார். மேலும், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து அதன் கட்டமைப்பையும் செயல்படுத்துவது குறித்தும் ஆலோசனை செய்து வருவதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

சரத் யாதவ், ராகுல் காந்தி

சரத் யாதவ்-ராகுல் காந்தி சந்திப்பு குறித்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் மனோஜ் குமார் ஜா கூறியதாவது: பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, ஆனால் அது இன்னும் நிறைவேறவில்லை. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முன் தேசிய அளவில் ஒரு பொதுவான செயல்திட்டம் தேவை. 

பணவீக்கம்

அடுத்த 200 நாட்களுக்கு மக்களுக்கான தங்களது திட்டத்தை எதிர்க்கட்சிகள் நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் மற்றும் சிறந்த பொருளாதாரம் ஆகியவற்றில் தங்கள் பார்வையை எதிர்க்கட்சிகள் தெளிவுப்படுத்த வேண்டும். அப்போதுதான் எதிர்க்கட்சிகள் ஒற்றுமை சாத்தியமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.