இன்னும் சில மாதங்களில் பீகார் முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்பார்.. ராஷ்டிரிய ஜனதா தள எம்.எல்.ஏ. பேச்சால் பரபரப்பு

 
தேஜஸ்வி யாதவ்

இன்னும் சில மாதங்களில் பீகாரின் முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்பார் என்று ராஷ்டிரிய ஜனதா தள எம்.எல்.ஏ. இசார் அஸ்பி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்னும் சில மாதங்களில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகாரின் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் மாநில முதல்வராக வருவார் என்று அவரது கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இசார் அஸ்பி

பீகாரின் கிஷன்கஞ்சில் ராஷ்டிரிய ஜனதா தள எம்.எல்.ஏ. இசார் அஸ்பி செய்தியாளர்களிடம் பேசியபோது, பீகார் மக்கள் மாநில முதல்வராக தேஜஸ்வி யாதவ் வருவதை விரும்புகிறார்கள். மாநிலத்தின் பெரும்பாலான தலைவர்கள் அதற்கு தயாராக இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன், ஆனால் சில சம்பிரதாயங்கள் உள்ளன, அதற்கு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் ஆகலாம். ஆனால் தேஜஸ்வி யாதவ் உண்மையில் பீகார் முதல்வராக வருவார் என தெரிவித்தார்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது வெங்காயம் வீசி தாக்கிய நபர்கள்… பிரச்சார கூட்டத்தில் பரபரப்பு

ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மாநில தலைவர் ஜெகதானந்த் சிங் கூறுகையில், நிதிஷ் குமார் அறிவித்தது எதுவாக இருந்தாலும், 2022ம் ஆண்டு இறுதிக்கு பிறகு அவர் நாட்டுக்காக போராடுவார். 2023ம் ஆண்டில் பீகாரின் எதிர்காலத்தை தேஜஸ்வி யாதவிடம் ஒப்படைப்பார் என்று நான் நம்புகிறேன்.  தேஜஸ்வி யாதவ் அதை மேலும் எடுத்து செல்வார். நிதிஷ் குமாருக்காக நாடு காத்திருக்கிறது, பீகார் மக்கள் தேஜஸ்வி யாதவுக்காக காத்திருக்கிறார்கள் என தெரிவித்தார்.