பிரதமர் மோடி பழனிசாமியிடம் மட்டுமே பேசினார்- ஆர்.பி. உதயகுமார்

 
modi eps

மதுரையில் பிரதமர் நரேந்திரமோடியை வரவேற்க வந்த போது எடப்பாடி பழனிச்சாமியிடம் மட்டுமே பிரதமர் பேசியதாகவும், அது அதிமுவுக்கு கிடைத்த அங்கீகாரம் எனவும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வேறு ஒருவருக்குதான் ஓபிஎஸ் கேட்டார்” - ஆர்.பி  உதயகுமார் | ex admk minister rb udhayakumar interview | Puthiyathalaimurai  - Tamil News | Latest Tamil ...

மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்வொன்றில் பங்கேற்று ஆதரவற்றோருக்கு போர்வைகளை வழங்கிய பின்னர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நேற்று மதுரை விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்க அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி சென்றார். எடப்பாடியை பார்த்ததும் பிரதமரின் முகத்திலே மலர்ச்சி தெரிந்தது.


எடப்பாடியிடம் How are you என நலம் விசாரித்தார் பிரதமர். I'm fine என பதிளிலளித்தார் எடப்பாடி. எடப்பாடி பழனிச்சாமியை தவிர வேறிடமும் யாரிடமும் பிரதமர் பேசவில்லை. விமான நிலையத்தில் பிரதமர் பேசிய ஒருவர் எடப்பாடி தான். இது அதிமுகவுக்கு கிடைத்த அங்கீகாரம். பிரதமர் நலம் விசாரித்தது அதிமுகவுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் இருவரும் அருகருகே இருந்தாலும் பேசிக் கொள்ளவே இல்லை” எனக் கூறினார்.