ஓபிஎஸ் சொல்வது அப்பட்டமான பொய்- ஆர்பி உதயகுமார் பரபரப்பு பேட்டி

 
rb udhyakumar

எம்ஜிஆர், ஜெயலலிதா தொண்டர்கள் அனைவரும் தன் பக்கம் என ஓபிஎஸ் பேசி வருவது அப்பட்டமான பொய்யென முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

RB Udhayakumar : ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் குறித்து ஓபிஎஸ், இபிஎஸ்  தெரிவித்ததால் ஸ்டாலினுக்கு அடிவயிறு கலங்குகிறது - ஆர்.பி.உதயகுமார் | RB ...

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் , கடந்த ஏழாம் தேதி இஸ்ரோவில் சென்று சாதனை படைத்த 10 மாணவிகளை சால்வை அணிவித்து பாராட்டிய , திருமங்கலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும்,  முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார்,  மதுரையில் ஒன்றிய அளவில் நடைபெற்ற செஸ் போட்டியில் கலந்துகொண்டார். அதன்பின் ஒன்றிய அளவில் முதல் பரிசு வெற்றி பெற்ற நான்கு மாணவிகளுக்கும், சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார் .

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி. உதயகுமார், “எம்ஜிஆர்,  ஜெயலலிதா தொண்டர்கள் அனைவரும் தன் பக்கம் இருப்பதாக ஓபிஎஸ் கூறுவது , அவர் நடத்திய கூட்டத்திலேயே தெரியும். மேலும் ஓபிஎஸ் -ன் வாதத்திற்கு மருந்துண்டு  பிடிவாதத்திற்கு மருந்தில்லை , தூங்குபவர்களை போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது. தொண்டர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் இபிஎஸ் பக்கம் இருப்பதற்கு பழனி-யில் நடந்த கூட்டமே சாட்சி. தொண்டர்கள் தன்பக்கம் இருப்பதாக ஓபிஎஸ் சொல்வது அப்பட்டமான பொய்” எனக் கூறினார்.