சசிகலா, தினகரன், ஓபிஎஸ் பங்கேற்கும் பொதுக்கூட்டம்

 
ttv

 சசிகலா, தினகரன், ஓபிஎஸ்  ஆகியோருடன் சமுதாய தலைவர்களையும் ஒன்றிணைத்து பொதுக்கூட்டம் நடத்துவேன் என்று உறுதியாக சொல்கிறார் ஸ்ரீதர் வாண்டையார்.  சிவகாசியில் நடந்த நிகழ்ச்சியில் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

 மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிவகாசியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.    அந்த கழகத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வாண்டையார் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரை ஆற்றியுள்ளார்.  

sr

 அவர் பேசிய போது,   மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.  அதிமுக, திமுக இரண்டு ஆட்சி காலங்களிலும் இது சம்பந்தமாக கோரிக்கை விடுத்தும் இதுவரைக்கும் நிறைவேற்றவில்லை என்று அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்,   சென்னை போன்ற பெருநகரங்களில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் விருதுநகர் மாவட்டம் பின்தங்கி இருக்கிறது. இதனால் இங்கு இருக்கும் இளைஞர்கள் சென்னை, திருப்பூர், கோவை போன்ற நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் வேலை தேடிச் செல்லும் அவல நிலை இருக்கிறது. இதை மாற்ற விருதுநகர் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்  என்றவர்,  அரசியலுக்கு கட்சிகளோடு சமுதாய தலைவர்களும் இன்றைக்கு பிரிந்து கிடக்கிறார்கள்.   இதனால் சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோருடன் சமுதாய தலைவர்களையும் ஒன்றிணைத்து பொதுக்கூட்டம் நடத்துவேன் என்றார்  உறுதியாக.

ஓபிஎஸ்-சசிகலா-தினகரன் மூன்று  பேரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர்கள் சார்ந்த சமூகம் வலியுறுத்தி வரும் நிலையில் ஸ்ரீதர் வாண்டையாரின் இந்த பேச்சு, முயற்சி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.