விஜிபியில் பொதுக்குழு! சேலம், கோவை முடிவு கைவிடப்பட்டது

 
ச்ர்

அதிமுகவின் செயற்குழு - பொதுக்குழு என்றாலே சென்னையில் வானகரம் ஸ்ரீவாரூ திருமண மண்டபம்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும்.  அதிமுகவை தொடர்ந்து பாமகவும் அங்கேதான் தனது பொதுக்குழுவையும்  நடத்தின.  கடந்த 23ம் தேதி நடந்த களேபரத்திற்கு பின்னர் அடுத்து 11ம் தேதி கூடுவதாக அறிவித்திருக்கும்  பொதுக்குழுவுக்கு  இடம் தேடி ஒரு வழியாக முடிவுவெடுத்து விட்டார்கள்.

ஹ்ஹ்

விஜிபி ரிசார்ட்  என்று ஒருவழியாக முடிவாகி இருக்கிறது என்று தெரிகிறது.   எஸ். பி. வேலுமணி,  ஜெயக்குமார் உள்ளிட்டோர் விஜிபி ரிசார்ட்டுக்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.  

முன்னதாக கோவை மேட்டுப்பாளையத்தில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் என்று எஸ். பி. வேலுமணி ஆலோசனை சொல்லியிருக்கிறார்.  உடனே மற்ற நிர்வாகிகள் கோவையில் பொதுக்குழுவை நடத்தினால் தேவையில்லாத விமர்சனங்கள் வரும் என்று சொல்லி சொன்னது எடுத்த அந்த முடிவு கைவிடப்பட்டிருக்கிறது. எடப்பாடி கோட்டை சேலத்திலி பொதுக்குழுவை நடத்த வேண்டும் என்றும் சிலர் ஆலோசனை சொல்லி இருக்கிறார்கள்.  இதை எடப்பாடியே நிராகரித்துள்ளார்.

ச்வ்

 இந்த நிலையில் பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பின்னர் தான் விஜிபி ரிசார்ட்டில் பொதுக்குழுவை நடத்த முன்வந்திருக்கிறார்கள்.  இதை அடுத்து பொதுக்குழுவுக்கு ஆன இடம் முடிவாகி விட்டதால் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட  தீர்மானங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தீவிர ஆலோசனையில் இறங்கியிருக்கிறது.