ஓபிஎஸ் மகனை கைது செய்யக்கோரி ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

 
ஒ

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம். பி. யை கைது செய்ய கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.    சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழந்த விகாரத்தில் அவரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் .  

பெரியகுளம் அடுத்த கோம்பை வனப்பகுதியை ஒட்டி முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பிக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.  அந்த நிலங்களை சுற்றி சோலார் மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.   கடந்த 27ஆம் தேதி அன்று இந்த சோலார் மின்வேலியில்  சிறுத்தை ஒன்று  சிக்கி இருந்து உள்ளது.  அதை வனத்துறையினர் மீட்க முயன்று உள்ளனர்.   அப்போது வன உதவி பாதுகாவலர் மகேந்திரனை தாக்கி விட்டு சிறுத்தை காட்டுக்குள் தப்பி ஓடி இருக்கிறது . 

ர்

தப்பி ஓடி விட்டதாக முதல் நாள் தகவல் வெளியானது.  ஆனால் மறுநாள் அதே இடத்தில் சிறுத்தை உயிரிழந்து விட்டதாக தகவல் வந்திருக்கிறது.   இதன் பின்னர் சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை  செய்யாமல் உடனடியாக எரித்து விட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.  இது பலருக்கும் சந்தேகத்தை கொடுத்தது. 

சர்ச்சை வலுத்ததால்,  கடந்த 28ஆம் தேதி தோட்டத்தில் தற்காலிகமாக ஆட்டுக்கிடை அமைத்திருந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவர்தான் சிறுத்தையை கொன்றதாக சொல்லி அவரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  கால்நடை வளர்ப்பு சங்கத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  சிறுத்தை உயிரிழந்த  விவகாரத்தில் தோட்டத்தின் உரிமையாளர் அமைத்த மின்வேலிய்ல்  சிக்கி தான் சிறுத்தை உயிரிழந்திருக்க வேண்டும்.   அதை மறைப்பதற்காக நிலத்தின் உரிமையாளரும்  வனத்துறையினரும் கூட்டு சேர்ந்து கொண்டு நாடகம் ஆடி வருகிறார்கள் என்று தெரிவிக்கின்றனர்.

 இதன் பின்னர் இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது.  அதனால் ரவீந்திரநாத் தோட்ட மேலாளர்கள் தங்கவேல், ராஜவேலு இருவரையும் வனத்துறையினர் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.  அதன் பின்னரும் எதிர்ப்பு குறையவில்லை.   ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

 அப்பாவி விவசாயியை வனத்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.  நில உரிமையாளர் ரவீந்திரநாத் எம்பி மீது வழக்குப்பதிவு அவரது கைது செய்ய வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர்.   இதனால்  ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.