கட்சி தலைவருக்கு அவமரியாதை - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை கண்டித்து போராட்டம்

 
sஅ

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை கண்டித்து குறவர் இன மக்கள் தேனியில் போராட்டம் நடத்தினர்.   நரிக்குறவர் நல வாரியத்தில் குறவர் என்பதை நீக்க வேண்டும் என்றும் ,  அமைச்சரை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் போராட்டம் நடத்தி உள்ளனர்.

 தேனி அல்லி நகரத்தில் வள்ளி நகர் பகுதியில் வசிக்கின்ற மக்கள் அப்பகுதியில் இருக்கும் திட்ட சாலையில் பந்தல் அமைப்பு தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   தமிழக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை கண்டித்து அவர்கள் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.

க்க்

 நல வாரியத்தில் குறவர் என்பதை நீக்க வேண்டும் குறவர் என்ற தங்கள் இனத்தின் பெயரை பிற சமூகத்தினரின் பெயரோடு இணைத்து பயன்படுத்தக் கூடாது என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்துகின்றனர்.   இந்த கோரிக்கைகள் தொடர்பாக வன வேங்கைகள் கட்சியின் சார்பில் ராஜபாளையத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.

 சென்னையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் இடம் மனு கொடுக்கச் சென்ற போது அவரை அமைச்சர் அவமரியாதை செய்து இருந்தார் என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.    இதனால் அமைச்சரை கண்டித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் நடத்தி வருகின்றனர்.