குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம்- அடித்துவிடும் பிரியங்கா

 
p

திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார் மு. க. ஸ்டாலின்.  அதனால்தான் திமுக நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம்.   ஆனால் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட  நிலையிலும் இன்னமும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கவில்லை திமுக அரசு.

p

 விரைவில் வழங்கப்படும்.. விரைவில் வழங்கப்படும் என்று ஆட்சிக்கு வந்தது முதல்  திமுக அமைச்சர்கள் மக்களிடத்தில் நம்பிக்கை அளித்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என்று அடித்து விட்டு இருக்கிறார்.

 கர்நாடக மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடந்து வருகிறது .  அம்மாநிலத்திற்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.  வரும் மே மாதத்திற்கு முன்பாகவே அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.   இதை முன்னிட்டு தற்போதைய அரசியல் கட்சிகள் அங்கு தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. எதிர்க்கட்சியான காங்கிரஸ் கர்நாடகா மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளிக்க தொடங்கி இருக்கிறது.

 காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட்டுகள் வரை இலவச மின்சார வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறது.   இந்த நிலையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்து இருக்கிறார்.  பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரியங்கா காந்தி இந்த வாக்குறுதியை அளித்திருக்கிறார்.   இந்த திட்டத்திற்கு கிருக லட்சுமி என்று பெயரிடப்பட்டிருப்பதாகவும் இந்த திட்டத்தின் கீழ் சுமார் 1.5 கோடி குடும்பத் தலைவிகள் பயனடைவார்கள் என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.