இதற்காக பிரியங்கா அடுத்த தலைவர் ஆகணும்! இடைக்கால தலைவரிடம் சொல்லப்பட்ட காரணங்கள்
குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி என்று காங்கிரஸ் காரிய கமிட்டி குழு பரிந்துரைத்திற்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தேசிய தலைவர் ராகுலா பிரியங்காவா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இருவருக்கும் ஆதரவு உள்ளது என்றாலும், பெரும்பாலானோர் ராகுலுக்கும், சிலர் பிரியங்காவுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் கட்சியில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
காங்கிரஸ் சிந்தனை அமர்வுக் கூட்ட மாநாடு உதய்ப்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கி இன்று மாலைடன் நிறைவு பெற்றிருக்கிறது. கடந்த இரண்டு தினங்களாக கட்சியின் மூத்த தலைவர்கள் முன்மொழிந்த தீர்மானங்கள் பற்றி விவாதித்து ஒப்புதல் அளிப்பதற்காக காங்கிரஸ் காரிய கமிட்டி குழு என்று கூடியது. கட்சியை வலுப்படுத்துவதே முக்கியமான நோக்கம் என்பதால், கட்சியில் வயது வரம்பு இன்றி அனைவருக்கும் பொறுப்பு வழங்கி ஒவ்வொரு பதவிக்கும் குறிப்பிட்ட காலம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று உயர்மட்ட குழு பரிந்துரைத்தது.
அது மட்டுமல்லாமல் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி என்கிற விதிமுறைகளையும் அமல்படுத்த குழு காரியக்கமிட்டி இடம் பரிந்துரைத்திருக்கிறது . கூட்டத்தில் அடுத்த தலைவர் யார்? என்பது தொடர்பான விரிவான ஆலோசனை நடந்திருக்கிறது. பெரும்பாலானோர் ராகுல் காந்தியை தேர்வு செய்து இருக்கிறார்கள். சிலர் பிரியங்கா காந்தியை தலைவர் ஆக்கலாம் என்று ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள்.
உத்தரப்பிரதேசத்துடன் பிரியங்காவை அடக்கி விடாமல் அவருக்கு என்று பரந்த வழியை உருவாக்கி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வழி செய்ய வேண்டும். அப்படி அது நடக்கும் பட்சத்தில் கட்சிக்கு மிகப்பெரிய செல்வாக்கை பெற்றுத் தரும் என்று கூறியிருக்கிறார்கள். ஆனாலும் இந்த பரிந்துரைக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
தற்போது இருக்கும் சூழலில் கட்சிக்குள் இருக்கும் அனைத்து குறைகளையும் தீர்க்க வேண்டும் என்றால் அதற்கு ராகுல் காந்தியை தலைவராக கொண்டு வருவது தான் ஒரே வழி என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனாலும் இது குறித்து எந்த இறுதி முடிவும் அறிவிக்கவில்லை இடைக்கால தலைவர் சோனியா காந்தி. அவர் ஜூலையில் நடைபெறும் கட்சித் தேர்தலுக்கு பின்னர் அதனை அறிவிப்பார் என்று சொல்கிறது கட்சி வட்டாரம்.