வரலாற்றை அழிக்க விரும்பினால் அதை செய்யுங்கள்... ஆனால் உண்மை வெளிவரும்.. மோடிக்கு பதிலடி கொடுத்த பிரியங்கா

 
பிரியங்கா காந்தி

வரலாற்றை அழிக்க  விரும்பினால் அதை செய்யுங்கள், ஆனால் உண்மை வெளிவரும் என நேரு குறித்த மோடியின் பேச்சுக்கு பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த திங்கட்கிழமையன்று நாடாளுமன்ற மக்களவையில், நான் நேரு ஜியின் பெயரை போதுமான அளவு பேசுவதில்லை என்று நீங்கள் தொடர்ந்து புகார் கூறுகிறீர்கள். இன்று நான் நேரு ஜி பற்றி மட்டுமே பேசுவேன் மகிழுங்கள். பண்டித் நேரு செங்கோட்டையில் இருந்து, கொரியா போர் சில சமயங்களில் நம்மை பாதிக்கலாம், அதனால் இந்தியாவில் பொருட்களின் விலை அதிகரிக்கும்  என்று கூறினார். நாட்டின் முதல் பிரதமர் உதவியற்றவர்- நாட்டின் முதல் பிரதமர் எப்படி நாட்டின் முன் கைகளை வீசினார் என்று மோடி கூறினார். 

மோடி

மேலும், கொரோனா காலத்தில் மும்பையிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை உத்தர பிரதேசம், பீகாருக்கு செல்ல அவர்களுக்கு டிக்கெட் வழங்கி, ஒரு குழப்பதை உருவாக்கினீர்கள், லாக்டவுன் விதிமுறைகளை மீறி புலம்பெயர்ந்தோரை சிக்கலில் தள்ளினீர்கள் என்று காங்கிரஸ் கட்சியையும் மோடி ஒரு பிடி  பிடித்தார். மோடியின் குற்றச்சாட்டுக்கு பிரியங்கா காந்தி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பதிலடி கொடுத்தார். பிரியங்கா காந்தி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:  மோடி ஏழு வருடங்களாக பிரதமராக இருக்கிறார், அதைப்பற்றி ஏன் பேசவில்லை?, அவர் ஏன் எதிர்காலத்தை பற்றி பேசவில்லை? இந்த ஏழு ஆண்டுகளில் எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை அவர் கூற வேண்டும். 

காங்கிரஸ்

காங்கிரஸ் ஆட்சியின் கீழ்  வறுமைக் கோட்டுக்கு மேலே வந்தவர்கள், இப்போது பா.ஜ.க. ஆட்சியின்கீழ் மீண்டும் கீழே நழுவியவர்கள் பற்றி அவர் (மோடி) பேச வேண்டும். நேரு இந்த நாட்டுக்காகவும், சுதந்திரத்திற்காகவும் என்ன செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும். வரலாற்றை அழிக்க  விரும்பினால் அதை செய்யுங்கள். ஆனால் உண்மை வெளிவரும். புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவ நாங்கள் டிக்கெட்டுகளை வாங்கினோம் என்பதை அவர் ஏற்றுக்கொள்கிறார். நாம் என்ன செய்திருக்க வேண்டும்? அவர்கள் தங்கள் வீடுகளுக்கு நீண்ட தூரம் நடந்து செல்லும்போது அரசாங்கம் செய்தது போல் கடவுளின் தயவில் அவர்களை விட்டுவிட்டதா? அப்போது அரசு என்ன செய்து கொண்டிருந்தது?. உதவி தேவைப்படும் மக்களுக்கு நாங்கள் உதவினோம். நீங்கள் (பா.ஜ.க.) ஒரு முன்னறிவிப்பு இல்லாமல் ஒரே நாளில் லாக்டவுனை செயல்படுத்தினீர்கள். பேருந்துகளோ, ரயில்களோ இல்லை அவர்கள் என்ன செய்திருப்பார்கள்? நீங்கள் (மோடி) உங்கள் பிரதமர் வீட்டில் தங்கியருந்தீர்கள், அவர்களை பற்றி நினைக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.