மோடி ஜியின் கோடீஸ்வர நண்பர்களின் நலனுக்காக எதிர்காலத்தில் மின்சார விலை அதிகரிக்கப்படும்.. பிரியங்கா காந்தி

 
பிரியங்கா காந்தி

மோடி ஜியின் கோடீஸ்வர நண்பர்களுக்கு பயனளிக்கும் வகையில், எதிர்காலத்தில் மின்சார விலை அதிகரிக்கப்படும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

மோடி ஜியின் கோடீஸ்வர நண்பர்களுக்கு பயனளிக்கும் வகையில், எதிர்காலத்தில் மின்சார விலை அதிகரிக்கப்படும்.
கடந்த மாதம் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், முன்கூட்டியே பேக் செய்யப்பட்ட ஆட்டா, பன்னீர், தயிர், அரிசி உள்ளிட்ட சில்லறை உணவுப்  பொருட்கள் மீது 5% வரியும், காசோலைகள் வழங்க வங்கிகள் வசூலிக்கும் கட்டணத்திற்கு 18 சதவீதமும், மருத்துவமனையில் அறை வாடகை (தீவிர சிகிச்சை பிரிவு தவிர்த்து) நோயாளி ஒருவருக்கு, நாளொன்றுக்கு ரூ.5000க்கு மேல் வசூலிக்கப்படும் தொகைக்கு 5 சதவீதமும்,  அட்லஸ் உள்ளிட்ட வரைபடங்களுக்கு 12 சதவீதமும்  வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி புதிய திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரி நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மின்சாரம்

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டிவிட்டரில், முதலில், பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி. சிலிண்டர்களின் விலையை (மத்திய பா.ஜ.க. அரசு) உயர்த்தியது. இப்போது கோதுமை, தயிர் விலை உயர்ந்துள்ளன. மோடி ஜியின் கோடீஸ்வர நண்பர்களுக்கு பயனளிக்கும் வகையில், எதிர்காலத்தில் மின்சார விலை அதிகரிக்கப்படும். ரேவடி கலாச்சாரம் என்ற வார்த்தையை பயன்படுத்தி ஏழைகள் மற்றும் நடுத்தர வர்த்தகத்தினர் இழிவுப்படுத்தப்படுகிறார்கள் என பதிவு செய்துள்ளார்.

ஜி.எஸ்.டி. ஒப்பீடு

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில், தயிர், லஸ்ஸி, மோர் மற்றும் பன்னீர் போன்ற தினசரி பயன்பாட்டுக்கான முன்பே பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு தற்போது விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. விகிதங்களின் ஒப்பீட்டு சார்ட்டை பதிவேற்றம் செய்து, அதிக வரிகள் வேலை இல்லை. ஒரு காலத்தில் உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்ததை எப்படி அழிப்பது என்பது பற்றிய பா.ஜ.க.வின் மாஸ்டர்கிளாஸ் என பதிவு செய்துள்ளார்.