உண்மையின் புயலை நிறுத்த முடியாது. சத்தியத்தின் அடங்காத குரல் ராகுல் காந்தி.. பிரியங்கா காந்தி

 
ராகுல் காந்தி

தடியடிகள் மற்றும் தண்ணீர் பீரங்கிகளால் உண்மையின் புயலை நிறுத்த முடியாது. சத்தியத்தின் அடங்காத குரல் ராகுல் காந்தி என பிரியங்கா காந்தி தெரிவித்தார்.


நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக ராகுல் காந்தி நேற்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். முன்னதாக, ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு ஏற்கனவே ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்களும், கட்சி தொண்டர்களும் குவிந்து இருந்தனர். ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர்களுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர் ராகுல் காந்தி அங்கு இருந்து அமலாக்கத்துறை அலுவலகம் சென்றார்.

பிரியங்கா காந்தி

காங்கிரஸ் மூத்த தலைவர்களும், தொண்டர்களும் ஏற்கனவே திட்டமிட்டப்படி, அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி ராகுல் காந்தியுடன் பேரணியாக கிளம்பி சென்றனர். ஆனால் வழியில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அங்கு இருந்து  ராகுல் காந்தியும், அவரது வழக்கறிஞர்களும் மட்டுமே அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு சென்றனர். முன்னதாக பிரியங்கா காந்தி பேஸ்புக்கில் ராகுல் காந்திக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

அமலாக்கத்துறை

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி தனது பேஸ்புக்கில் ராகுல் காந்திக்கு ஆதரவாக கருத்து பதிவு செய்துள்ளார். பிரியங்கா காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில், போலீஸ் தடுப்புகள், அமலாக்கத்துறையின் வெற்று அச்சுறுத்தல்கள், தடியடிகள் மற்றும் தண்ணீர் பீரங்கிகளால் உண்மையின் புயலை நிறுத்த முடியாது. சத்தியத்தின் அடங்காத குரல் ராகுல் காந்தி என்று அழைக்கப்படுகிறது என பதிவு செய்து இருந்தார்.