ராகுல் காந்தியை 4 ஆண்டுகளாக சந்திக்கவில்லை.. ஒவ்வொரு முறையும் அவரை சந்திக்க வேண்டிய அவசியமில்லை.. பிரித்விராஜ் சவான்

 
ராகுல் காந்தி

ராகுல் காந்தியை 4 ஆண்டுகளாக சந்திக்கவில்லை, ஒவ்வொரு முறையும் அவரை சந்திக்க வேண்டிய அவசியமில்லை என அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரித்விராஜ் சவான் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரித்விராஜ் சவான் கடந்த சில தினங்களுக்கு முன் பேட்டி ஒன்றில், நான் டெல்லியில் இருக்கும் போதெல்லாம் டாக்டர் மன்மோகன் சிங்கை சந்திப்பேன். ஆனால் அவரது உடல்நிலை முன்பு போல் இல்லை. அவர் எப்போதும் விருந்தோம்பல் மற்றும்  பேச தயாராக இருக்கிறார். நான் நேரம் கேட்கும் போதெல்லாம் சோனியா காந்தியையும் சந்தித்து இருக்கிறேன். 

பிரதமர் மோடியின் நமோ செயலி இந்தியர்களின் தனியுரிமைகளை மீறியது.. பிரித்விராஜ் சவான் பகிரங்க குற்றச்சாட்டு

ஆனால் நீண்ட நாட்களாக ராகுல் காந்தியை சந்திக்க முடியவில்லை. அவரை சந்தித்து நான்கு ஆண்டுகள் ஆகிறது என நினைக்கிறேன். கட்சி தலைமையை அணுக வேண்டிய அளவுக்கு இல்லை என புகார் எழுந்துள்ளது என தெரிவித்து இருந்தார். பிரித்விராஜ் சவானி குற்றச்சாட்டு காங்கிரஸ் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று ராகுல் காந்தியை சந்திக்காதது குறித்து பிரித்விராஜ் சவான் விளக்கம் அளித்துள்ளார்.

சோனியா காந்தி

பிரித்விராஜ் சவான் கூறியதாவது: ராகுல் காந்தி தனது சொந்த வழியில் பிரதமரை எதிர்க்கிறார். நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். ஒவ்வொரு முறையும் அவரை சந்திக்க வேண்டிய அவசியமில்லை. இது என்னை பற்றியது அல்ல. கடந்த 2  ஆண்டுகளாக கோவிட் இருந்தது. அப்போது யாரும் யாரையும் சந்திக்கவில்லை. ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பே, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை அமைப்பு தொடர்பான பணிக்காக சந்திக்க சொன்னார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.